பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு நகை கடன் நிலுவை விபரம் கேட்பு

Added : மார் 03, 2021
Share
Advertisement
சென்னை:நடப்பாண்டு, ஜன., 31ம் தேதி வரை உள்ள, நகைக் கடன் விபரங்களை அனுப்புமாறு, அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களிடமும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிக்கை கேட்டுள்ளார்.பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 6 சவரன் வரை, அடகு வைத்து பெற்ற நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக, முதல்வர் பழனிசாமி, சமீபத்தில் அறிவித்தார். இதனால், அடகு

சென்னை:நடப்பாண்டு, ஜன., 31ம் தேதி வரை உள்ள, நகைக் கடன் விபரங்களை அனுப்புமாறு, அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களிடமும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிக்கை கேட்டுள்ளார்.

பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 6 சவரன் வரை, அடகு வைத்து பெற்ற நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக, முதல்வர் பழனிசாமி, சமீபத்தில் அறிவித்தார். இதனால், அடகு வைத்த பலர், நகைகளை கேட்டு, வங்கிகளுக்கு சென்றபடி உள்ளனர்.

இந்நிலையில், ஜன., 31 வரை உள்ள நகை கடன் விபரங்களை அனுப்புமாறு, அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களிடமும், கூட்டுறவு சங்க பதிவாளர் அறிக்கை கேட்டுள்ளார்.இது குறித்து, கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள், கூட் டுறவு விற்பனை சங்கங்களில், ஜன., 31 வரை, 6 சவரன் வரை கடன் பெற்றவர்களின் விபரங்களை, மாவட்ட வாரியாக, மின்னஞ்சலில் அனுப்புமாறு, அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.அவை கிடைத்ததும், அடுத்த கட்டமாக, நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X