பொது செய்தி

தமிழ்நாடு

40.68 லட்சம் பேர் வரி கணக்கு தாக்கல்

Added : மார் 03, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், 2019 -- -20ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, 40.68 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர்.நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்சவரம்பை மீறும் மாத ஊதியதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவரும், ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். 2019 - 20ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல், 2020 ஏப்ரல் முதல் துவங்கியது.இதன்படி, 2019- - 20ம் நிதியாண்டுக்கான கணக்குகளை, ஜனவரி

சென்னை: தமிழகத்தில், 2019 -- -20ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, 40.68 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்சவரம்பை மீறும் மாத ஊதியதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவரும், ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். 2019 - 20ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல், 2020 ஏப்ரல் முதல் துவங்கியது.இதன்படி, 2019- - 20ம் நிதியாண்டுக்கான கணக்குகளை, ஜனவரி வரை, நாடு முழுதும், 6.66 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும், 40.68 லட்சம் பேர், கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த, 2018 -- 19ம் நிதியாண்டில், நாடு முழுதும், 6.59 கோடி பேர்; தமிழகத்தில், 42.56 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்திருந்தனர். அதை ஒப்பிடுகையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை, தமிழகத்தில் குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X