அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் சுறுசுறுப்பு: தேர்தல் அறிக்கை வெளியிட்டு அசத்தல்

Updated : மார் 04, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (65+ 46)
Share
Advertisement
சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும், கூட்டணி அமைப்பு, தொகுதிகள் பங்கீடு போன்ற விவகாரங்களில் உடன்பாடு காண முடியாமல், பெரிய கட்சிகள் போராடுகின்றன. இந்த சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரசாரத்தையும், சுறுசுறுப்புடன் துவக்கி உள்ளார்.தமிழகத்தில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான
மக்கள் நீதி மய்யம், கமல், தேர்தல் அறிக்கை, சுறுசுறுப்பு

சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும், கூட்டணி அமைப்பு, தொகுதிகள் பங்கீடு போன்ற விவகாரங்களில் உடன்பாடு காண முடியாமல், பெரிய கட்சிகள் போராடுகின்றன. இந்த சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரசாரத்தையும், சுறுசுறுப்புடன் துவக்கி உள்ளார்.

தமிழகத்தில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணியை முடுக்கி விட்டுள்ளன. கூட்டணி பேச்சு முடியாமல், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பெரிய கட்சிகள் குழம்பி தவிக்கின்றன.இக்கட்சிகளின் தலைமையிலான கூட்டணியில் சேர முன்வந்துள்ள கட்சிகளும், தங்களுக்கான எண்ணிக்கை தெரியாமல், அடுத்த கட்சி பேச்சுக்கு காத்திருக்கின்றன.


2ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன். சென்னையில் மெட்ரோ ரயிலில் DMSல் இருந்து ஆலந்தூர் வரை பயணம் செய்த அவர், பின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, பெண்கள் நல்வாழ்வு, விளையாட்டு மேம்பாடு, இளைஞர் நலனுக்கான செயல் திட்டங்களை கமல் அறிவித்தார். சீருடை பணியில் பெண்களுக்கு 50 சதவீத இடம், உலக தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளன.

தேர்தல் அறிக்கை


இந்த சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், கூட்டணி பேச்சை ஒருபுறம் நடத்தியபடி, பிரசாரத்தையும் துவக்கியுள்ளார். பெண்கள், இளைஞர்களுக்கான திட்டங்கள் அடங்கிய, தேர்தல் அறிக்கையையும், நேற்று வெளியிட்டார்.

இது தொடர்பாக, கமல் அளித்த பேட்டி:இல்லத்தரசி, இளைஞர்கள் வேலைவாய்ப்பு, விளையாட்டு மற்றும் பெண்களுக்கான சில திட்டங்களை உருவாக்கியுள்ளோம். பெண்களுக்கான ஏழு செயல் திட்டத்தில், இல்லத்தரசிகளுக்கு வருமானம், துன்பப்படும் பெண்களுக்கான தங்குமிடம், பெண்களுக்காக மட்டுமே இயங்கும் மாவட்ட மகளிர் வங்கி, இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனைகள் உள்ளிட்ட, ஏழு திட்டங்கள் உள்ளன. பஸ் மற்றும் ரயில் நிறுத்தத்தில், பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு, அரசு சேவையில் உள்ள ஒவ்வொரு சீருடை துறையிலும், 50 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெறும்.இளைஞர்களுக்கான ஏழு திட்டத்தில், 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் வசிப்பிடத்தில் இருந்து, 100 சதுர கி.மீட்டருக்குள் பணி உத்தரவாதம் வழங்கப்படும்.
சிறப்பு வசதிகள்


முதல்முறை தொழிலாளர்களுக்கு, வட்டியில்லா, 'மின் பைக்' வழங்கப்படும். தேசிய மற்றும் மாநில அளவில், கல்வி மற்றும் திறமைக்காக, இளைஞர்கள் பரிமாற்றம் ஊக்குவிக்கப்படும்.
வேலையை, இளைஞர்கள் தேட வேண்டாம்; தகுதிக்கு ஏற்ப வேலையும், நிவாரணமும் வழங்கப்படும். ஐந்து பேருக்கு வேலை வழங்குபவர், சிறப்பு நிதி சலுகை பெறுவார்.

விளையாட்டு மேம்பாட்டுக்கான, ஏழு திட்டத்தில், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம், பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளுக்கு ஊக்குவிப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், மனிதநேய சர்வதேச பார்வையாளர்கள் விளையாட்டாக, ஜல்லிக்கட்டு மாற்றம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


சில மாற்றங்கள்


கூட்டணி குறித்து பேசி வருகிறோம்; முடிவானதும் கூறுகிறேன். விருப்ப மனுக்கள், 400க்கு மேல் வந்துள்ளன. மக்கள் விரும்பும் கூட்டணியின், முதல்வர் வேட்பாளராக, என்னை முன்மொழிந்த, ச.ம.க., தலைவர் சரத்குமாருக்கு நன்றி. மாற்றத்தை விரும்பும் நல்லவர்களுடன், கூட்டணி வைப்போம். பிரசாரத்தில், போலீசார் அனுமதி, சில இடங்களில் கிடைக்காததால், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது எதற்கு என்பது, மக்களுக்கு தெரியும். இவ்வாறு கமல் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (65+ 46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
04-மார்-202123:02:04 IST Report Abuse
srinivasan USA...leaders will have a clean image in personal life That's the basic requirement in politics
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
04-மார்-202120:47:44 IST Report Abuse
oce நித்தியானந்தாவுக்கு வாக்குரிமை திருவண்ணாமலையில் இருக்கிறது. வாக்களிக்க வருவாரா.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
04-மார்-202120:43:38 IST Report Abuse
oce நீதி மய்யம் ஒருவேளை குருட்டு பூனை இருட்டில் விட்டத்தில் தாவியது போல் ஆட்சியில் அமரும் வாய்ப்பு கிடைத்து ஆட்சியை இழந்த நகட்சி அரசு நிர்வாக நிதி இருப்பை மிக குறைவாக விட்டுப்போயிருந்தால் கமல் சொல்லும் திட்டங்களை செயல்படுத்த முடியாது. ஆழம் பார்த்து காலை விடவேண்டும். நடைமுறைபடுத்த கூடிய திட்டங்கள் தான் தேர்தல் அறிவிப்பில் இடம் பெற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X