எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

குற்றப் பின்னணி இருந்தால் 'சீட்' இல்லை : சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்?

Updated : மார் 04, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு, 'சீட்' வழங்காமல், வெற்றி வாய்ப்புள்ள புதிய நபர்களை களமிறக்க, முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா இருந்த வரை, அவரது கண் அசைவுக்கேற்ப கட்சி இயங்கியது. சதுரங்க விளையாட்டில், காய்கள் வெட்டி எறியப்படுவதுபோல், நிர்வாகிகள் மாற்றம் அரங்கேறியது. தேர்தல் வந்து விட்டால், அ.தி.மு.க.,வினருக்கு
குற்றப் பின்னணி, சீட் இல்லை,  சாட்டை,முதல்வர், முதல்வர் பழனிசாமி, முதல்வர் இ.பி.எஸ்.,  ஜெயலலிதா, அதிமுக, அ.தி.மு.க.,

குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு, 'சீட்' வழங்காமல், வெற்றி வாய்ப்புள்ள புதிய நபர்களை களமிறக்க, முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா இருந்த வரை, அவரது கண் அசைவுக்கேற்ப கட்சி இயங்கியது. சதுரங்க விளையாட்டில், காய்கள் வெட்டி எறியப்படுவதுபோல், நிர்வாகிகள் மாற்றம் அரங்கேறியது. தேர்தல் வந்து விட்டால், அ.தி.மு.க.,வினருக்கு உற்சாகம் களைகட்டும். மாவட்ட செயலர் பின்னால் அணிவகுத்த நிர்வாகிகள் எல்லாம், போட்டியிட விருப்பம் தெரிவித்து, மனு அளிப்பர். ஏனெனில், சாதாரண கிளை நிர்வாகிக்கும், ஜெ., வாய்ப்பளித்து வந்தார். குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு, 'சீட்' வழங்குவதை தவிர்த்து வந்தார். தேர்தல் செலவிற்கு பணம் இல்லாதவர்களையும், கட்சி பணத்தை கொடுத்து, போட்டியிட வைத்து, வெற்றி பெற வைத்துள்ளார்.

மற்ற கட்சிகளில், குறிப்பிட்ட நபர்களுக்கே, மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதற்கு நேர்மாறாக, அ.தி.மு.க.,வில் யாருக்கு, 'சீட்' என்பது கணிக்க முடியாத நிலை இருந்தது. வேட்பாளாக அறிவிக்கப்பட்ட பின், கட்சியினர் எதிர்ப்பு காரணமாக, வாய்ப்பை இழந்தவர்களும் உண்டு.

ஜெ., மறைவுக்கு பின், அமைச்சர்கள் அசைக்க முடியாதவர்களாக, மாறி உள்ளனர். தற்போதைய நிலையில், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் அனைவரும், தங்களுக்கு, 'சீட்' உறுதி என்ற, நிலையில் உள்ளனர்.எனினும், ஜெ., இருந்தபோது நடந்தது போல, தகுதி உள்ளவர்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவர்களுக்கும் வாயப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நிறைய பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.கட்சியில் எந்த பதவியிலும் இல்லாமல், வெறும் உறுப்பினராக மட்டும் உள்ளவர்கள் ஏராளமானோர், விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

அவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், முதல்வர் இ.பி.எஸ்., சாட்டையை சுழற்ற வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள், குற்ற பின்னணி உள்ளவர்கள், கட்சியினரை மதிக்காதவர்கள், மக்கள் எதிர்ப்பை சம்பாதித்தவர்கள் போன்றோருக்கு, 'சீட்' வழங்கக் கூடாது. அதற்கு பதிலாக, வெற்றி வாய்ப்புள்ள புதிய நபர்களை தேர்வு செய்து, வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது, கட்சியினரின் விருப்பமாக உள்ளது. இது, நிறைவேறுமா என்பது, ஓரிரு நாளில் தெரிய வரும்.

- நமது நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
10-மார்-202114:35:23 IST Report Abuse
Visu Iyer என்னங்க தமாஷ் பண்ணறீங்க... இவரே குற்ற பின்னணியின் பிடியில் தானே இருக்கிறார்.. இவரே தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாதே... ஆக... தேர்தல் வேட்பாளர் பழனிசாமி இல்லை என்பது உறுதி என்று சொல்றீங்க.. அட.. இது தெரியாமலா பன்னீர் ஐயா இவரை முதல்வர் வேட்பாளராக சம்மதித்தார் என்று வியப்பாக பார்ப்பது புரிகிறது.. இனி அவுங்க வீட்ல பாயசம் தான் போங்க...
Rate this:
Cancel
sivam -  ( Posted via: Dinamalar Android App )
04-மார்-202122:57:16 IST Report Abuse
sivam சிறந்த ஜோக் ஆசிரியர் அவர்களே
Rate this:
Cancel
ayyo paavam naan - chennai,இந்தியா
04-மார்-202121:15:48 IST Report Abuse
ayyo paavam naan அப்போ நான் மட்டும் தான் நிக்க முடியுமா? அட கடவுலே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X