பொது செய்தி

தமிழ்நாடு

'கோவாக்சின்' தடுப்பூசி மருந்து 81 சதவீத திறனுடையது

Updated : மார் 05, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசி மருந்து, மூன்றாம் கட்ட ஆய்வில், 81 சதவீத திறனுடன் செயல்படுவது தெரிய வந்துள்ளது.ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து, கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்து, மூன்றாம் கட்ட ஆய்வில் இருந்தபோது, அவசர
கோவாக்சின், தடுப்பூசி மருந்து,  பாரத் பயோடெக்,

புதுடில்லி: 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசி மருந்து, மூன்றாம் கட்ட ஆய்வில், 81 சதவீத திறனுடன் செயல்படுவது தெரிய வந்துள்ளது.

ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து, கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்து, மூன்றாம் கட்ட ஆய்வில் இருந்தபோது, அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுதும் கோவாக்சின் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறியதாவது:இந்தியாவிலேயே மிக அதிகமாக, 25 ஆயிரத்து, 800 பேரிடம், கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. அதில், கோவாக்சின், 81 சதவீத திறனுடன் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம், 27 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட, மூன்று கட்ட ஆய்வு விபரங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரசை தடுப்பதில், கோவாக்சின் மிக அதிக ஆற்றலை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், உருமாறிய, வீரியமிக்க கொரோனா வைரசை தடுக்க, குறிப்பிடத்தக்க எதிர்ப்பாற்றல் இந்த தடுப்பூசிக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
04-மார்-202112:15:32 IST Report Abuse
Appan இந்த தடுப்பு ஊசியை எல்லோரும் போடணும்..இது இந்தியர்களால் உருவாக்க பட்டது..இது ஒரு இந்திய கண்டு பிடிப்பு... வாழ்த்துக்கள்..
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-மார்-202102:34:32 IST Report Abuse
தமிழவேல் 81 சததிறன் னு சொன்னா, ஊசி போட்டுக்கிட்டா பாக்கி 19 பேருக்கு கொரோனா வருமோ ?
Rate this:
04-மார்-202112:16:30 IST Report Abuse
mannandhaiச‌ல்ல‌டையில் 19 ஓட்டையிருந்தால் எப்ப‌டியோ, ம‌ர‌த்தில் 100 ப‌ற‌வை இருக்கும் போது ஒரு ப‌ற‌வையை சுட்டால் பாக்கி 99 ப‌ற‌வை ம‌ர‌த்தில் இருக்கும் என்ப‌து எப்ப‌டியோ.... அப்ப‌டி...
Rate this:
saravanan murugesan - Bangalore,இந்தியா
04-மார்-202119:20:24 IST Report Abuse
saravanan murugesansim...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X