தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

2 லிஸ்ட்: குழப்பத்தில் ஸ்டாலின்!

Updated : மார் 05, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
தி.மு.க.,வின் தேர்தல் ஆலோசனை நிறுவனம், தொகுதி தோறும் ஆய்வு நடத்தி, ஒரு வேட்பாளர் பட்டியலை தயாரித்து அளித்திருக்கிறது. மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழுவினர், மற்றொரு பட்டியலை தயாரித்துள்ளனர். இரண்டு பட்டியலும், இப்போது ஸ்டாலின் கையில்; எதை, 'ஓகே' செய்வது என்பதில் குழப்பம்.கடந்த, 2016 தோல்விக்கான காரணங்களை, அக்கட்சி அவசரமாக ஆராய்ந்தது. இரண்டு முக்கிய காரணங்கள் கிடைத்தன.
திமுக, தி.மு.க., ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், வேட்பாளர் பட்டியல், குழப்பம், ஆலோசனை நிறுவனம், குழப்பம்

தி.மு.க.,வின் தேர்தல் ஆலோசனை நிறுவனம், தொகுதி தோறும் ஆய்வு நடத்தி, ஒரு வேட்பாளர் பட்டியலை தயாரித்து அளித்திருக்கிறது. மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழுவினர், மற்றொரு பட்டியலை தயாரித்துள்ளனர். இரண்டு பட்டியலும், இப்போது ஸ்டாலின் கையில்; எதை, 'ஓகே' செய்வது என்பதில் குழப்பம்.

கடந்த, 2016 தோல்விக்கான காரணங்களை, அக்கட்சி அவசரமாக ஆராய்ந்தது. இரண்டு முக்கிய காரணங்கள் கிடைத்தன. கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதிகளை அள்ளிக் கொடுத்தது, முதல் காரணம். தகுதி இல்லாத வேட்பாளர்களை களத்தில் இறக்கியது,இரண்டாவது காரணம்.

உதாரணமாக, பாபநாசம், நன்னிலத்தில், காங்கிரஸ்; பூம்புகாரில், முஸ்லிம் லீக்; விருத்தாசலம், சிதம்பரம், மயிலாடுதுறை, ஏற்காட்டில், தி.மு.க., என, 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில், வெற்றியை பறி கொடுத்தது, தி.மு.க., அணி.இந்த முறை, அப்படி நடக்கக்கூடாது என்று, ஆலோசனை நிறுவனத்தை வேலைக்கு அமர்த்தியுள்ளார், ஸ்டாலின்.

தேர்வில் நீடிக்கும் சிக்கல்

அதன் ஊழியர்கள், உள்ளூர் கட்சியினரிடம் பேசி, பட்டியல் தயாரித்துள்ளனர்.அதேபோல, மூத்த நிர்வாகிகள், அறிவாலய பிரதிநிதிகள் அடங்கிய குழுவும், ஸ்டாலின் ஆணைப்படி நீண்ட அலசலுக்கு பின், ஒரு பட்டியலை தயாரித்துள்ளது.இரண்டுக்கும் நிறைய முரண்பாடுகள்.

கடலுாரில், 2011ல் வாய்ப்பு கொடுக்காததால், அ.தி.மு.க., பக்கம் போய் திரும்பி வந்த அய்யப்பன், ஆலோசனை நிறுவன பட்டியலில், முதலிடத்தில் உள்ளார். நிர்வாகிகள் குழுவோ, புகழேந்தி, ராஜா, குணசேகரன் என, முதல் மூன்று இடங்களை பூர்த்தி செய்துள்ளது.
ஏற்காடு தனி தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ஆ.நி., தரப்போ, உட்கட்சி பிரச்னையால், இளைஞரணி துணை தலைவர் பதவியை இழந்த மாறன், மலைவாழ் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்த, தங்கசாமியின் பெயர்களை பரிந்துரைத்திருக்கிறது.

மயிலாடுதுறையை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்காமல், தி.மு.க., நிற்க வேண்டும் என்பது, மாவட்ட கட்சியினர் விருப்பம். குத்தாலம் அன்பழகன், மூவலுார் மூர்த்தி பெயர்களை, பரிந்துரை செய்திருக்கிறது, ஆலோசனை நிறுவனம். அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என, நிர்வாகிகள் குழு, வேறு பெயர்களை கொடுத்துள்ளது.

பாபநாசம் தொகுதியில், கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்டது. அங்கே, அ.தி.மு.க., வென்று துரைக்கண்ணு அமைச்சரானார். அங்கு வன்னியர் அதிகம் என்பதால், அந்த சமூக வேட்பாளரை, தி.மு.க.,வே நிறுத்தலாம் என்பது ஆ.நி., சிபாரிசு. நேர்மாறாக, கள்ளர் வேட்பாளரை நிறுத்த சொல்கிறது நிர்வாகிகள் குழு.

இப்படி ஏறுக்கு மாறாக, இரு தரப்பும் பரிந்துரை செய்துள்ளதால், எதை, 'டிக்' செய்வது என்பதில், ஸ்டாலின் குழப்பத்தில் இருப்பதாக தகவல். அறிவாலயம், சோர்ஸில்' விசாரித்த போது, 'எங்க தளபதி, 'இங்கி பிங்கி பார்முலா'ப்படி வேட்பாளர் தேர்வு செஞ்சார்னு எழுத போறீங்க. அதுக்கு ஏன் எங்கிட்ட கருத்து கேக்குறீங்க?' என்றார் குரலை உயர்த்தி.
எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா...

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
04-மார்-202121:57:24 IST Report Abuse
sankaseshan கணியக்காவுக்கு கோட்டா கிடையாதா பாவம் அப்பா இருந்தால் இப்படி நடக்குமா ?
Rate this:
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
04-மார்-202121:53:29 IST Report Abuse
Ambika. K இரண்டு லிஸ்ட் லையும் தளபதி பேரு மிஸ்ஸிங் நு சொன்னாங்க. உசாரு.
Rate this:
Cancel
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் வாரிசுகளுக்கு ஜால்றா தட்டுபவர்களை தேர்ந்தெடுப்பதில் என்ன தடுமாற்றம் ? உதயநிதிக்கு பிறகு யார் தலைவர் என்று நேர்காணலில் கேட்க வேண்டும் . உதயநிதியின் மகன் என்று பதில் கூறுபவர்களை வேட்பாளர்களாக அறிவிக்கலாம்
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
04-மார்-202120:38:25 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்அப்போ jaisha யாருங்கோ , அத்வானி மகள் MP ராஜ்நாத்சிங் மகன் MLA மந்திரி UP இது எல்லாம் உங்கள் கணக்கில் வாரிசு கணக்கில் வராதோ...
Rate this:
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் எம் எள் ஏ ஆவது வேறு கட்சி தலைவராகி பிரதமர் ஆவது வேறு ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X