பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று திறனாளி இளைஞருக்கு 'டூ - வீலர்' வாங்கி தந்த கலெக்டர்

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை: மாற்றுத் திறனாளி இளைஞருக்கு, மதுரை கலெக்டர், தன் சொந்த செலவில், இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார்.மதுரை ஆனையூரைச் சேர்ந்த, காளிமுத்து - மாரீஸ்வரி தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன், மகள், பிளஸ் 1 தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து கொண்டார். 21 வயதான மகன் பழனிகுமார், பிறவிலேயே வாய் பேச முடியாத, நடக்க முடியாத மாற்றுத்
மாற்று திறனாளி, இளைஞர், டூ - வீலர், கலெக்டர்

மதுரை: மாற்றுத் திறனாளி இளைஞருக்கு, மதுரை கலெக்டர், தன் சொந்த செலவில், இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார்.

மதுரை ஆனையூரைச் சேர்ந்த, காளிமுத்து - மாரீஸ்வரி தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன், மகள், பிளஸ் 1 தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து கொண்டார். 21 வயதான மகன் பழனிகுமார், பிறவிலேயே வாய் பேச முடியாத, நடக்க முடியாத மாற்றுத் திறனாளி.கிடைக்கும் குறைந்த வருவாயை கொண்டு, மகனை வளர்ந்து வந்தனர்.

இந்நிலையில், மாரீஸ்வரி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். காளிமுத்தும், போதைக்கு அடிமையானார். மகனை யாரை நம்பியும் விட முடியாமல், மாரீஸ்வரி எங்கு சென்றாலும் துாக்கி செல்வார்.'மகனை துாக்கி செல்ல முடியாததால், இருசக்கர வாகனம் வழங்கினால் உதவியாக இருக்கும்' என கலெக்டர் அன்பழகனிடம் மனு அளித்தார்.

அவரது வறுமையை அறிந்த கலெக்டர், சொந்த செலவில், இருசக்கர வாகனம் வாங்கி, மாற்றுத் திறனாளி இளைஞரை அமர வைத்து செல்லும் வகையில், 'சீட் பெல்ட்'டுடன் கூடிய இருக்கையும் அமைத்து கொடுத்தார். நேற்று அந்த இருசக்கர வாகனத்தை, மாரீஸ்வரியிடம் ஒப்படைத்த கலெக்டர், பழனிகுமாரை அமர வைத்து தானே கலெக்டர் அலுவலகத்தில், ஒரு ரவுண்ட் ஓட்டி உற்சாகமூட்டினார். கலெக்டரின் மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
04-மார்-202123:22:51 IST Report Abuse
PRAKASH.P Anbe sivam
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
04-மார்-202108:13:54 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இவர் போன்றவர்கள் நாட்டை ஆள வேண்டும். சகாயம் மாதிரி இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X