சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.88 கோடி தங்கம் பறிமுதல்

Added : மார் 04, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.88 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை, சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். ஐக்கிய அரபு நாட்டின், துபாய் நகரில் இருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று காலை, 8:15 மணிக்கு, சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த, சென்னையைச் சேர்ந்த, நைனா முகமது, 41; திருச்சியைச் சேர்ந்த, ஜாகிர் ஹுசைன், 49; அஜித் முகமது, 26,
 ரூ.1.88 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை:துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.88 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை, சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு நாட்டின், துபாய் நகரில் இருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று காலை, 8:15 மணிக்கு, சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த, சென்னையைச் சேர்ந்த, நைனா முகமது, 41; திருச்சியைச் சேர்ந்த, ஜாகிர் ஹுசைன், 49; அஜித் முகமது, 26, ஆகிய மூவரிடமும், சந்தேகத்தில் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

அவர்களது, உடை மற்றும் ஆசன வாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.42 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில், 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 19 ஐ - போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், கை கடிகாரங்கள், 'லேப்டாப்'கள் பறிமுதல்செய்யப்பட்டன.கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து, சுங்கத்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
04-மார்-202122:50:24 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு இப்படி வெளிநாட்டில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக திருடுபவர்களுக்கு எதற்கு பாஸ்போர்ட்.. இனிமேல் இவர்கள் வெளிநாட்டுக்கு செல்லமுடியாதபடி இவர்களின் பாஸ்போர்ட் ஆவணங்களை கம்ப்யூட்டரில் நிரந்தரமாக நிராகரிக்க ஆவண செய்யவேண்டும்.. ஒருதடவையா இரண்டு முறையா... இதே தொழில்..ஊரை ஏமாற்றுவது.. இவர்கள் செய்யும் வேலை முதல் கோணல் முற்றும் கோணல்.. இவர்கள் இந்த நாட்டுக்கே பாரம்.
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
04-மார்-202113:32:43 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ மூர்கம் = கடத்தல் / பாவாடை = பணச் சலவை / மதசார்பற்ற = ஏமாளி
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
04-மார்-202103:40:01 IST Report Abuse
NicoleThomson சின்ன குருவிங்க மாட்டியிருக்காங்க அலப்பறை
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
04-மார்-202114:53:42 IST Report Abuse
Dr. Suriyaபெரிய குருவி நம்ப பக்கத்து சேட்டனும் சொர்ண அக்காவுமா ?...
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
08-மார்-202109:33:02 IST Report Abuse
NicoleThomsonநெஜம்மா ஏன்னால் பதில் சொல்லமுடியாது டாக்டர் சாப்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X