எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த13 ஆயிரம் வீரர்களை சேர்க்க அனுமதி

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :நேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், எஸ்.எஸ்.பி., எனப்படும் சாஸ்த்ரா சீமா பல் படைப் பிரிவில், 13 ஆயிரம் வீரர்களைக் கொண்ட, 12 பட்டாலியன்களை புதிதாக உருவாக்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.நேபாளம், பூடான் எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை, எஸ்.எஸ்.பி., எனப்படும் ஆயுதம் தாங்கிய எல்லை பாதுகாப்பு படைப் பிரிவு
எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த13 ஆயிரம் வீரர்களை சேர்க்க அனுமதி

புதுடில்லி :நேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், எஸ்.எஸ்.பி., எனப்படும் சாஸ்த்ரா சீமா பல் படைப் பிரிவில், 13 ஆயிரம் வீரர்களைக் கொண்ட, 12 பட்டாலியன்களை புதிதாக உருவாக்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நேபாளம், பூடான் எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை, எஸ்.எஸ்.பி., எனப்படும் ஆயுதம் தாங்கிய எல்லை பாதுகாப்பு படைப் பிரிவு கவனித்து வருகிறது. இந்தப் படையில், 90 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.
நேபாளத்துடனான, 1,751 கி.மீ., நீள எல்லை; பூடானுடனான, 699 கி.மீ., தூர எல்லையில், பாதுகாப்பு பணிகளை இந்தப் படைப் பிரிவு கவனித்து வருகிறது. மேலும், சிக்கிம் மாநிலத்தில், பூடான் மற்றும் திபெத் உடனான எல்லைப் பகுதியையும், இந்தப் படைப் பிரிவு கண்காணித்து வருகிறது.


latest tamil news
இந்தப் படைப் பிரிவின் தேவைகள் குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, அமித் ஷா, 2019ல் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, '12 பட்டாலியன்கள்; 'பிரான்டியர்' எனப்படும், ஒரு படைப் பிரிவு தலைமைகம்; 'செக்டார்' எனப்படும், மூன்று துணை படைப் பிரிவு தலைமையகங்கள் அமைக்க வேண்டும்' என, எஸ்.எஸ்.பி., அறிக்கை அளித்திருந்தது.

ஒரு பட்டாலியின் என்பது, ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் கொண்டது. செக்டார் என்பது, 56 பட்டாலியன்கள் கொண்டது. அதேபோல், 24 செக்டார் அடங்கியது, ஒரு பிரான்டியர்.இந்த நிலையில், 13 ஆயிரம் வீரர்கள் கொண்ட, 12 பட்டாலியன்களை உருவாக்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், டில்லியை தலைமையிடமாக வைத்து, ஒரு செக்டார் உருவாக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள செக்டார்கள் மற்றும் பிரான்டியருக்கான அனுமதி பின்னர் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
04-மார்-202113:36:51 IST Report Abuse
M.COM.N.K.K. பாரத தாய்க்கு என்றும் வெற்றியே
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
04-மார்-202113:21:14 IST Report Abuse
pattikkaattaan எல்லைச்சாமிகளுக்கு வீர வணக்கங்கள் .. இந்திய ராணுவம் பலம் பெறட்டும் ..
Rate this:
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
04-மார்-202112:14:46 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy Our great CDS wants to reduce the strength of the Army personnel it will be very soon that the pay and Pension of Para Military forces will far exceed that of Army personnel
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X