ஆரணி:''கடந்த, 2011 தேர்தலில் நாம் கூட்டணி வைக்கவில்லை என்றால், அ.தி.மு.க., என்ற கட்சியே இருந்திருக்காது,'' என, தே.மு.தி.க., மாநில துணைச் செயலர் சுதீஷ் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆர்.குன்னத்துாரில் நேற்று நடந்த, தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:கடந்த, 2011 தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் நாம் கூட்டணி வைக்கவில்லை என்றால், இன்று, அ.தி.மு.க., என்ற ஒரு கட்சியே இருந்திருக்காது. வரும் தேர்தலில் கூட, கூட்டணிக்காக, அ.தி.மு.க., பின் நாம் செல்லவில்லை. அ.தி.மு.க., தான், தே.மு.தி.க., பின்னால் வருகிறது.
எங்களிடம் கூட்டணிக்கு வாருங்கள் என, பல கட்சிகளிடம் இருந்தும், எனக்கு போன் வருகிறது. எல்லா கட்சியிலிருந்தும் அழைப்பு வருது. நம் கட்சிக்கு அங்கீகாரமும், முரசு சின்னமும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால், எட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஜெயிக்க வேண்டும். அதற்காகத் தான் கூட்டணியை விரும்புகிறோம். இன்னும் மூன்று நாட்களில், கூட்டணி குறித்து, விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார்.
நாம், தி.மு.க., - அ.தி.மு.க., எந்த பக்கம் சேர்கிறோமோ, அந்த கூட்டணி வெற்றி பெறும். நான் ராஜ்யசபா சீட்டுக்கு ஆசைப்பட்டது கிடையாது. தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று செல்ல வேண்டும் என்பது தான், விஜயகாந்த் விருப்பம்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE