சென்னை:நடப்பாண்டு ஜன. 31ம் தேதி வரை உள்ள நகைக் கடன் விபரங்களை அனுப்புமாறு அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களிடமும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிக்கை கேட்டுள்ளார்.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண்கூட்டுறவு கடன் சங்கங்கள் தங்க நகை அடமானத்தில் கடன்வழங்குகின்றன. அவற்றில் 6 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் பழனிசாமி சமீபத்தில் சட்டசபையில் அறிவித்தார்.இதனால் அடகு வைத்த பலர் நகைகளை கேட்டு வங்கிகளுக்கு சென்றபடி உள்ளனர்.
இந்நிலையில் ஜன. 31 வரை உள்ள நகை கடன் விபரங்களை அனுப்புமாறு அனைத்துகூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களிடமும் கூட்டுறவு சங்க பதிவாளர் அறிக்கை கேட்டுள்ளார். இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகள் கடன் சங்கங்கள்கூட்டுறவு விற்பனை சங்கங்களில் ஜன. வரை 1.25 லட்சம் ரூபாய் வரை நகை கடன் பெற்றவர்கள்; 1.50 லட்சம் ரூபாய் வரை பெற்றவர்கள்; 5 சவரன் வரை கடன் பெற்றவர் விபரம் 6 சவரன் வரை கடன் பெற்றவர்களின் விபரங்களை மாவட்ட வாரியாக மின்னஞ்சலில் அனுப்புமாறு அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.அவை கிடைத்ததும் அடுத்த கட்டமாக நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE