பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி திறன் 81 சதவீதம்: பாரத் பயோடெக் மகிழ்ச்சி

Added : மார் 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசி மருந்துமூன்றாம் கட்ட ஆய்வில் 81 சதவீத திறனுடன் செயல்படுவது தெரியவந்துள்ளது.ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்து மூன்றாம் கட்ட ஆய்வில் இருந்தபோது அவசர கால

புதுடில்லி:பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசி மருந்துமூன்றாம் கட்ட ஆய்வில் 81 சதவீத திறனுடன் செயல்படுவது தெரியவந்துள்ளது.

ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்து மூன்றாம் கட்ட ஆய்வில் இருந்தபோது அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் கோவாக்சின் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறியதாவது:இந்தியாவிலேயே மிக அதிகமாக 25 ஆயிரத்து 800 பேரிடம் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கோவாக்சின் 81 சதவீத திறனுடன் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம் 27 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட மூன்று கட்ட ஆய்வு விபரங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரசை தடுப்பதில் கோவாக்சின் மிக அதிக ஆற்றலை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் உருமாறிய வீரியமிக்க கொரோனா வைரசை தடுக்க குறிப்பிடத்தக்க எதிர்ப்பாற்றல் இந்த தடுப்பூசிக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டிட்யூட் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X