பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., குறித்த ஐ.ஐ.எம்., கட்டுரை

Added : மார் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'பா.ஜ. உயர் ஜாதி ஹிந்துக்களுக்கான கட்சி' என ஆய்வு கட்டுரை சமர்ப்பித்துள்ள இந்திய உயர் மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கு மத்திய பா.ஜ. அரசு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.இந்திய உயர் மேலாண்மை கல்வி நிறுவனமான அஹமதாபாத் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட பிஎச்.டி. ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்டுரையில் 'பா.ஜ. மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி

சென்னை:'பா.ஜ. உயர் ஜாதி ஹிந்துக்களுக்கான கட்சி' என ஆய்வு கட்டுரை சமர்ப்பித்துள்ள இந்திய உயர் மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கு மத்திய பா.ஜ. அரசு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

இந்திய உயர் மேலாண்மை கல்வி நிறுவனமான அஹமதாபாத் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட பிஎச்.டி. ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்டுரையில் 'பா.ஜ. மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை குறிப்பிட்ட இனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. பா.ஜ.வானது ஹிந்துக்களில் உயர் ஜாதியினருக்கு ஆதரவான கட்சி' என கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை குறித்து பிரதமர் மோடிக்கு பா.ஜ. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் 'இந்த ஆராய்ச்சி கட்டுரையை மறுமுறை ஆய்வு செய்ய வேண்டும்; அதுவரை அந்த கட்டுரையின் பகிர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என கோரியுள்ளார்.இந்த கடிதம் அடிப்படையில் ஐ.ஐ.எம். இயக்குனர் இரோல் டிசோசாவுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் அனுப்பி கட்டுரையின் நகலை கேட்டுள்ளது.

இதற்கு ஐ.ஐ.எம். தரப்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் 'ஆராய்ச்சி கட்டுரை அதற்கான பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டியில் வைக்கப்பட்டது. அப்போதே இதுகுறித்து கருத்துகளை தெரிவித்திருக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.இதையடுத்து மீண்டும் அந்த கட்டுரையின் நகலை அனுப்புமாறு ஐ.ஐ.எம். நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
04-மார்-202113:41:31 IST Report Abuse
 N.Purushothaman இந்தியாவின் உயர் படிப்பு கல்விக்கூடங்கள் இடது சாரிகள் கையில் சிக்கி எப்படி சீரழிகின்றன என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X