உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
பி.என்.கபாலி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' நோய் தொற்று, நம்மிடம் இருந்து போகிற வழியைக் காணோம்; அண்டை மாநிலங்களில், இன்னமும் நோய் பரவல் தலைவிரித்தாடுகிறது. நம் மாநிலத்திலும், கொரோனா அலை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எழலாம் என்ற அச்சமுள்ளது. கொரோனா பரவல் குறித்து, ஆட்சியாளர்கள் இன்னும் விழி பிதுங்கி தான் நிற்கின்றனர். ஆனால் மக்களிடம், நோய் பரவல் குறித்த பயமே இல்லாமல் போய் விட்டது. 'மக்களின் அலட்சியம், வேதனை அளிக்கிறது' என, சுகாதாரத்துறை செயலர் சரியாகவே கூறியுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை என, தஞ்சை போலீசார் தடை விதித்திருந்தனர்; மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் பூட்டு போடப்பட்டது; இதில் எந்த தவறும் இல்லை. கூட்டம் கூடினால், கொரோனாவிற்கு தான் கொண்டாட்டம் என்பதை கூட புரிந்து கொள்ளாமல், 'பூட்டை உடைத்து, குளத்தில் இறங்குவோம்' எனக் கூறிய மக்களின் மூர்க்கத்தனம், கண்டிக்கத்தக்கது.

கொரோனா ஆரம்ப காலத்தில், இதே போன்று தான், வேறொரு மதத்தினர் டில்லியில் கூட்டம் நடத்தி, அந்நோயை, நாடு முழுதும் பரவச் செய்தனர். இதை பார்க்கும்போது, 'மதம் என்பது, மக்களை போதைக்குள்ளாக்கும் ஓ - பியம் போன்றது' என்ற, ரஷ்ய பொருளாதார அறிஞரின் கூற்று உண்மையோ என, நினைக்கத் தோன்றுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE