இன்றைய க்ரைம் ரவுண்ட் அப்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட் அப்

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021
Share
தமிழக நிகழ்வுகள்1. வாலிபருக்கு 'போக்சோ'செங்குன்றம், : சென்னை, புழல் அடுத்த காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், முதலாவது தெருவைச் சேர்ந்தவர் கிஷோர், 20. அவர், செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை, வீட்டில் இருந்து கடத்தி சென்றார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர், செங்குன்றம் போலீசில் புகார் செய்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார், நேற்று முன்தினம் மாலை,

தமிழக நிகழ்வுகள்
1. வாலிபருக்கு 'போக்சோ'
செங்குன்றம், : சென்னை, புழல் அடுத்த காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், முதலாவது தெருவைச் சேர்ந்தவர் கிஷோர், 20. அவர், செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை, வீட்டில் இருந்து கடத்தி சென்றார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர், செங்குன்றம் போலீசில் புகார் செய்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார், நேற்று முன்தினம் மாலை, வாலிபருடன், சிறுமியை மீட்டு, மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அனைத்து மகளிர் போலீசார், வழக்கு பதிந்து, கிஷோரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.latest tamil news2. திருமணம் செய்து வைப்பதாக ரூ.1.27 கோடி சுருட்டல்
திண்டுக்கல் : வேடசந்துார் அருகே கொழுந்தியாவை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி பைனான்சியரிடம் ரூ.1.27 கோடி , 45 பவுன் நகையை மோசடி செய்த குடும்பத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.


latest tamil news3. கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்
விக்கிரவாண்டி:கணவனை கொலை செய்து, வீட்டில் புதைத்து, கள்ளக்காதலனோடு தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியைச் சேர்ந்தவர் லியோபால், 33; வேன் டிரைவர். இவரது மனைவி சுஜித்ராமேரி, 24. இவர்களுக்கு, 5 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ராதாகிருஷ்ணனுடன் சுஜித்ராமேரிக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.

இதையறிந்த லியோபால், சுஜித்ராமேரியை கண்டித்துள்ளார். இதனால், சுஜித்ராமேரி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து லியோபாலை கொலை செய்து, வீட்டு தோட்டத்தில் புதைத்துள்ளார். பின், கணவர் காணாமல் போனதாக நாடகம் ஆடியதும், கள்ளக்காதலனுடன் தலைமறைவானதும், போலீஸ் விசாரணையில் தெரிந்தது. தனிப்படை போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.


latest tamil news


Advertisement


4. தேரோட்டத்தின் போது 9 பவுன் நகை கொள்ளை
கோவை : கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில், பெண்களிடமிருந்து, 9 பவுன் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news5. குன்னூர், கோத்தகிரியில் ரூ. 2.89 லட்சம் ரூபாய் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், நீலகிரி மாவட்டம் சோதனைச் சாவடிகள் மற்றும் பல இடங்களிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.70 ஆயிரமும், கட்டபெட்டுவில் ரூ. 1.46 லட்சமும், பர்லியார் சோதனை சாவடியில் ரூ.73 ஆயிரமும் என 2.89 லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது. கட்டபெட்டு பகுதியில் நடத்திய சோதனையில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பிடிபட்டது. இதே போல குன்னூர் பர்லியார் சோதனை சாவடியில் 73 ஆயிரம் ரூபாய் பிடிபட்டது.

6. ரேஷன் அரிசி கடத்தல் வாகனம் பறிமுதல்
பந்தலுார் : பந்தலுார் அருகே, நெலாக்கோட்டை பஜாரில் போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த பிக்-அப் ஜீப்பை ஆய்வு செய்தபோது அதில், அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், நெலாக்கோட்டைஅருகே விலங்கூர் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்வதுதெரியவந்தது.வாகனத்தில் இருந்த, 22 மூட்டைகளில் இருந்த,1,100கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஷாஜகான்,29, என்பவரை கைது செய்தனர். பின்பு, உணவு பொருள்கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


latest tamil news
இந்தியாவில் குற்றம் :


ஒரு காரை 5 பேருக்கு விற்று திருடியவர் கைது
காசியாபாத் : உ.பி.,யில், ஒரு காரை விற்று, பின் அதே காரை திருடி வேறு ஒருவரிடம் விற்பதை வாடிக்கையாக கொண்ட 'பலே ஆசாமி' போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில், காசியாபாத் நகரைச் சேர்ந்த, பிரசாந்த் தியாகி என்பவர், தன் உறவினரின் 'வேகன் ஆர்' காரை விற்பதாக, ஓ.எல்.எக்ஸ் வலைதளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.இதைப் பார்த்து, அம்மன் திவிவேதி என்பவர், 1.40 லட்சம் ரூபாய்க்கு அந்த காரை வாங்கியுள்ளார். பிரசாந்த் தியாகி, காரை விற்பதற்கு முன், அதில், ஜி.பி.எஸ்., கருவியை பொருத்தி உள்ளார். இதன் மூலம் கார் எங்கெங்கு செல்கிறது என்பதை, அவர், இணைய உதவியுடன் பார்த்து வந்துள்ளார்.

ஒருநாள், அம்மன் திவிவேதி, காரை 'வாட்டர் சர்வீஸ்' செய்வதற்கு விட்டுச் சென்று உள்ளார். அங்கு வந்த பிரசாந்த் தியாகி, வேறு ஒரு சாவி மூலம் காரை திருடிச் சென்று, போலி 'நம்பர் பிளேட்' பொருத்தி, மீண்டும் ஓ.எல்.எக்ஸ்., வலைதளம் மூலம் வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். இப்படி, ஐந்து பேரிடம், ஒரே காரை மாற்றி மாற்றி விற்பனை செய்து பண மோசடி செய்துள்ளார், பிரசாந்த் தியாகி.அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, பிரசாந்த்தியாகியை கைது செய்தனர். அத்துடன் அவரது வீட்டில் இருந்து, இரு மொபைல் போன்கள், 'சிம்' கார்டுகள், போலி ஆதார், பான்கார்டுகள், நம்பர் பிளேட்டுகள், வாகன காப்பீடு ரசீதுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.


latest tamil news
உலக நடப்பு


மகனை கொலை செய்துவிட்டு காணவில்லை என, போலீசில் புகார் கொடுத்த தாய்
ஓஹியா : அமெரிக்காவில், 6 வயது மகனை காரை ஏற்றி கொன்றுவிட்டு, காணவில்லை என, போலீசில் புகார் கொடுத்த தாயையும், அவரது காதலனையும், போலீசார் கைது செய்தனர்.


latest tamil news
என், 6 வயது மகன் ஜேம்ஸ் ஹட்சின்சன் காணாமல் போய்விட்டான். அவனை கண்டுபிடித்து தர வேண்டும்' என, கூறியிருந்தார். இதையடுத்து, ஹட்சின்சனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இரண்டு நாட்களாகியும், ஹட்சின்சன் கிடைக்கவில்லை. இதற்கிடையே, கோஸ்னியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். முதலில் மழுப்பிய அவர், பின், மகனை காரை ஏற்றிக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X