புதுச்சேரி முதல்வர் வேட்பாளர் யார்? பா.ஜ., கூட்டணியில் 'பஞ்சாயத்து'

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரியில், முதல்வர் வேட்பாளர் பிரச்னையால், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில், என்.ஆர்.காங்., கட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.புதுச்சேரியில், பா.ஜ., - அ.தி.மு.க., - என்.ஆர்.காங்., கூட்டணியில், தொகுதி பங்கீடு பேச்சு துவக்கப்பட்டது. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என, என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி வலியுறுத்தினார்.இதற்கு பா.ஜ., தரப்பு
புதுச்சேரி, முதல்வர் வேட்பாளர் , பா.ஜ., கூட்டணி, பஞ்சாயத்து, B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

புதுச்சேரி: புதுச்சேரியில், முதல்வர் வேட்பாளர் பிரச்னையால், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில், என்.ஆர்.காங்., கட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரியில், பா.ஜ., - அ.தி.மு.க., - என்.ஆர்.காங்., கூட்டணியில், தொகுதி பங்கீடு பேச்சு துவக்கப்பட்டது. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என, என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி வலியுறுத்தினார்.இதற்கு பா.ஜ., தரப்பு சம்மதித்தபோதும், அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, சமீபத்தில் பா.ஜ.,வில் ஐக்கியமான நமச்சிவாயத்தை முதல்வராக்குவதற்கு பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக, ரங்கசாமி சந்தேகம் அடைந்தார்.


latest tamil news


புதுச்சேரியில் முதல்வர் வேட்பாளர் யார்? பா.ஜ.,கூட்டணியில் 'பஞ்சாயத்து'


மேலும், 'புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சி அமைக்கப்படும்' என்ற அக்கட்சியினரின் கோஷம், அவரது சந்தேகத்தை அதிகமாக்கியது. அதிருப்தி அடைந்த ரங்கசாமி, பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி, தனித்து போட்டியிடுவது என முடிவு எடுத்தார்.நேற்று முன்தினம் இரவு, தன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளை தனியார் ஓட்டலுக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள், தனித்து போட்டியிடலாம் என கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, புதுச்சேரிக்கான பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான அர்ஜுன் ராம் மேக்வால், இணை பொறுப்பாளர் ராஜிவ் சந்திரசேகர் எம்.பி., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் புதுச்சேரிக்கு வந்தனர்.என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமியை, நிர்மல்குமார் சுரானா, நேற்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினார். தனியார் ஓட்டலில் நடந்த இந்த சந்திப்பு, 15 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக தன்னை அறிவிக்க வேண்டும் என, ரங்கசாமி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.அப்படி அறிவித்தால், தொகுதி பங்கீட்டில் விட்டுத்தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சி தலைமையிடம் பேசிவிட்டு மீண்டும் சந்திப்பதாகவும், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் எனவும், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சு முடிந்து வெளியே வந்த நிர்மல்குமார் சுரானா கூறும்போது, ''பா.ஜ., கூட்டணியில் தான் என்.ஆர்.காங்., இருக்கிறது. தற்போதைய பேச்சு சுமுகமாக நடந்துள்ளது. பேச்சு தொடரும்,'' என தெரிவித்தார்.

முதல்வர் வேட்பாளர் பிரச்னையால், பா.ஜ., - என்.ஆர்., காங்., இடையே இழுபறி ஏற்பட்டுள்ளதை, காங்., கூட்டணியினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மார்-202100:28:59 IST Report Abuse
தல புராணம் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்., இருக்கிறது, ஆனால் என்.ஆர்.காங்., கூட்டணியில் பாஜக இருக்கா ?? வெளியே வந்த பாஜக நிர்மல்குமார் சுரானா கூறும்போது, ''பா.ஜ., கூட்டணியில் தான் என்.ஆர்.காங்., இருக்கிறது" என்றார்.. இதை என்.ஆர்.காங் .கட்சிக்காரன் சொல்லணும்லே..
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் HOW ABOUT KIRAN BEDI?
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
04-மார்-202120:12:06 IST Report Abuse
Ellamman ?? பிழைப்பு சிரிப்பா சிரிக்குது
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
04-மார்-202121:07:13 IST Report Abuse
Ellammanஜல்ஸா பார்ட்டி வண்டி புதுசேரியில் சாவி போடுவதற்கு முன்பே சீஸ் ஆகுதே???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X