பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' நாளிதழ் கவுரவ ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி நல்லுடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் பலர் கண்ணீர் அஞ்சலி

Updated : மார் 06, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (118)
Share
Advertisement
சென்னை : 'தினமலர்' நாளிதழின் கவுரவ ஆசிரியரும், சங்க கால நாணயவியலின் தந்தையுமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, 88, சென்னையில் நேற்று ( மார்ச்4) காலை, காலமானார். இவரது இறுதிச்சடங்கு ஊர்வலம் இன்று (மார்ச்-5) நடந்தது. இறுதி ஊர்வலத்தில் பலரும் திரளாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.மதியம் 12 மணிக்கு அவரது நல்லுடல் தகனம் செய்யப்பட்டது. இந்திய அரசின் உயரிய தொல்காப்பியர் விருது,

சென்னை : 'தினமலர்' நாளிதழின் கவுரவ ஆசிரியரும், சங்க கால நாணயவியலின் தந்தையுமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, 88, சென்னையில் நேற்று ( மார்ச்4) காலை, காலமானார். இவரது இறுதிச்சடங்கு ஊர்வலம் இன்று (மார்ச்-5) நடந்தது. இறுதி ஊர்வலத்தில் பலரும் திரளாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.மதியம் 12 மணிக்கு அவரது நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.
இந்திய அரசின் உயரிய தொல்காப்பியர் விருது, லண்டன் வரலாற்று அமைப்பின் ஆய்வியல் அறிஞர் விருதுகளை பெற்றவர். சங்ககால நாணயவியலின் தந்தை என, போற்றப்படுபவர்.

'தினமலர்' நாளிதழின் கவுரவ ஆசிரியரும், சங்க கால நாணயவியல் அறிஞருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, நேற்று சென்னையில் காலமானார். கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக, 'தினமலர்' நாளிதழின் ஆசிரியராக இருந்து, சிறப்புடன் பணியாற்றி, வழிநடத்தியவர்.

தினமலர் இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்! தமிழ் அச்சு மொழி வளர்ச்சியை பண்படுத்தியவர்

சென்னை பெசன்ட் நகர், காவேரி சாலையில் உள்ள இல்லத்தில், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.நேற்று, அரசியல் கட்சி தலைவர்கள், நாணயவியல் அறிஞர்கள், தமிழறிஞர்கள், பொது நல அமைப்பினர் மற்றும் பொது மக்களும் திரளாகச் சென்று, அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு, இன்று பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடந்தது.latest tamil newsநாஞ்சில் மைந்தன்


'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் - கிருஷ்ணம்மாள் தம்பதியின் இரண்டாவது மகன் இரா.கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், நாகர்கோவில் அருகே, வடிவீஸ்வரம் கிராமத்தில், 1933 ஜன., 18ல் பிறந்தார். நாகர்கோவில் சேது லெக்குமிபாய் பள்ளி என்ற, எஸ்.எல்.பி., பள்ளியிலும், ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரியிலும் பயின்றார். காரைக்குடி மற்றும் சென்னை பல்கலைகளில், உயர் கல்வி படித்தார். பின், 'தினமலர்' நாளிதழில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.


திறன் மிக்க ஆசிரியர்


அவரது கல்வித் தகுதியும், வாழ்வியல் அனுபவங்களும், பத்திரிகை ஆசிரியர் பணியை நுட்பமாக்கின. பல்வேறு தரப்பு மக்களின் வறுமை, சீரற்ற வளர்ச்சி, சமச்சீரற்ற வாய்ப்பு என, சமூகத்தின் பல்வேறு அம்சங்களை மனதில் கொண்டு, சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், பத்திரிகை ஆசிரியர் என்ற பணியை செவ்வனே நிறைவேற்றிஉள்ளார்.
ஆசிரியர் குழுவின் விவாதங்களில், 'ஒரு சொல்லுக்கு, பல்லாயிரம் உணர்த்தல்' என்ற அடிப்படையில் கருத்துக்களைப் பகிர்வார்.அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் சமூக நிலையை கண்டறிந்து, அதற்கேற்ப செய்திகளை தயாரிக்க உணர்த்துவார்.
செய்திகளில் தவறு இருப்பதை அறிந்தால், அதை உரியவர்களுக்கு அறிவுறுத்தி திருத்துவார். பத்திரிகை ஆசிரியர் பணியானது, அவரது பன்முகத் திறனை வெளிப்படுத்தியது. செய்திகளை கையாள்வதில் உரிய தகுதியுள்ளவர்களை இனம் கண்டு, ஆசிரியர் குழுவின் பணிகளில் அமர்த்தி, 'தினமலர்' நாளிதழின் செய்திப் பிரிவை சிறப்பாக நிர்வகித்தார்.


ஈ.வெ.ரா., எழுத்து சீர்மைlatest tamil news
ஈ.வெ.ராமசாமி அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்து சீர்திருத்த முறையை, 'தினமலர்' நாளிதழில், அமல்படுத்தினார். இந்த முறையில், 1966ல், ஒரு பத்தி செய்தியை அச்சு கோர்த்து முதன்முறையாக, 'தினமலர்' திருச்சி பதிப்பில் வெளியிட்டார். தமிழக அரசும், மற்ற தமிழ் இதழ்களும், பதிப்பகங்களும் அதற்கு பல ஆண்டுகளுக்குப் பின் தான், எழுத்து சீர்திருத்த முறையைப் பின்பற்ற துவங்கின.

மறைந்த டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, பண்டைய நாணயவியல் ஆராய்ச்சிகளில், மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சங்க காலத்தில் தமிழ் நிலப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள் வெளியிட்ட பல நாணயங்களை கண்டறிந்து, அவற்றை ஆராய்ச்சி செய்து, பல நுால்களும், ஆராய்ச்சி கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார்.


நாணயவியல் ஆய்வு


டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் ஆய்வில், பாண்டிய மன்னன் பெருவழுதி வெளியிட்ட நாணயம் தான், அவருக்கு முதலில் கிடைத்த சங்ககால நாணயம்.இதுகுறித்து, 1985ல், காசி, பனாரஸ் ஹிந்து பல்கலையில் நடந்த அகில இந்திய நாணயவியல் மாநாட்டில், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.அகில இந்திய நாணயவியல் சங்க ஆய்வேட்டில், அந்த கட்டுரை வெளியானது. பெருவழுதி நாணயம், கி.மு., 2 அல்லது, 3ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று, அவரது ஆய்வில் தெரிய வந்தது.

சங்க காலத்தில் ஆட்சி செய்த, சேர மன்னர் மாக்கோதை வெளியிட்ட நாணயங்கள், கிரேக்க நாட்டவர், தமிழகத்துடன் செய்த வாணிபத்தை நிரூபிக்கும் வகையிலான நாணயங்கள், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வில் கண்டறியப்பட்டன.திரேஸ், தெசலி, கீரிட் பகுதியில் உருவாக்கிய நாணயங்களை, தமிழகத்தில் கண்டெடுத்து, அதன் ஆராய்ச்சியின் வழியே, தமிழர் வாழ்ந்த பகுதியில், கிரேக்கர்களின் வாணிக தொடர்பையும், அதன் காலத்தையும் ஆய்வில் நிரூபித்துள்ளார்.


அப்துல் கலாமின் அன்பை பெற்றவர்


பின்தங்கிய பகுதிகளில் பொருளாதாரத்தில் நலித்தவர்களின், கல்வி முன்னேற்றத்துக்காக, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'ஜெயித்துக் காட்டுவோம்' என்ற நிகழ்ச்சியை மேற்கொண்டார். கடந்த, 1998ம் முதல் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ - மாணவியர், தங்களின் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை, நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சி, தமிழகம் முழுதும் மாணவ - மாணவியரை தேர்வுகளில் ஜெயிக்க வைக்க உதவியது.இந்த நிகழ்ச்சியையும், அதை நடத்திய டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியையும், இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பாராட்டினார். மேலும், அவரது விருப்பத்தின்படி, சென்னையில், மாநகராட்சிப் பள்ளி மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 2007, 2012 ஆண்டுகளில் பங்கேற்று, மாணவர்களிடம் உரையாடினார்.


இங்கிலாந்தின் கவுரவம்


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ராயல் நாணயவியல் கழகம், 1997ல், டாக்டர். இரா.கிருஷ்ணமூர்த்திக்கு, கவுரவ உறுப்பினருக்கான, 'பெலோ ஆப் ராயல் நியூமிஸ்மேட்டிக் சொசைட்டி' என்ற உயரிய தகுதி அளித்தது. கொங்கு நாணயவியல் ஆய்வு மையம், கொங்கு ஆய்வு மையம், கலைமகள் கா.மீனாட்சிசுந்தரனார் அருங்காட்சியகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 1998, ஜூலை, 20ல், ஈரோட்டில் பாராட்டு விழா நடத்தி, நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தன.கடந்த, 1998ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, பாராட்டு விழா நடத்தியது; திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகம், 'கபிலவாணர் விருது' வழங்கி கவுரவித்தது. சென்னை மாநிலக் கல்லுாரியின் பழைய மாணவர் சங்கமும் பாராட்டு விழா நடத்தியது.


தொல்காப்பியர் விருது


திருச்சி நாணயவியல் ஆய்வு கழகம், 1999, பிப்ரவரியில், 'நாணயவியல் ஆய்வுச் செம்மல்' என்ற பட்டம் வழங்கிக் கவுரவித்தது. இதழியல் தொண்டுகளைப் பாராட்டி, 2000 ஏப்ரலில், மெட்ராஸ் தெலுங்கு அகாடமி என்ற அமைப்பு, 'யுகாதி புரஸ்கார் -2000' என்ற விருது வழங்கி சிறப்பித்தது. ஸ்ரீரங்கத்தில் உள்ள, 'செண்பகம் தமிழ் அரங்கு' என்ற அமைப்பு, 2001 ஜனவரியில், 'நாணயவியல் பேரறிஞர்' என்ற கவுரவத்தை அளித்தது.

தமிழ் செம்மொழி என்ற தகுதியைப் பெற முக்கிய சேவையாற்றியதற்காக, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு, இந்திய அரசு, 2012 -- 2013ம் ஆண்டுக்கான, தொல்காப்பியர் விருது வழங்கியது. கடந்த, 2015ல் புதுடில்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதை வழங்கி, பாராட்டு பத்திரம் அளித்து கவுரவித்தார்.


அலங்கரித்த விருதுகள்


நாணயவியல், இதழியல், எழுத்தியல் என, பல துறைகளில் ஜொலித்தவர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி. அவரது பன்முக திறனை பாராட்டி, மத்திய - மாநில அரசுகள், பல்வேறு பல்கலைகள், வரலாற்று ஆய்வு மையங்கள் மற்றும் அயல்நாட்டு ஆய்வு அமைப்புகள் போன்றவை, பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.

சங்க காலத்தில் ஆட்சி செய்த சோழ மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை ஆராய்ந்து, 'சங்க கால சோழர் நாணயங்கள்' என்ற தலைப்பில் நுால் எழுதியதற்காக, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 1988ல் சிறந்த நுாலுக்கான பரிசு வழங்கப்பட்டது.சங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி காலத்து நாணயங்களை ஆராய்ந்து, 'பாண்டியர் பெருவழுதி நாணயங்கள்' என்ற நுாலை வெளியிட்டார். இதை சிறந்த வரலாற்று ஆய்வு நுாலாக, தஞ்சை தமிழ் பல்கலை தேர்வு செய்து, 1988ல் பரிசு வழங்கி கவுரவித்தது.

தமிழகத்தின் சிறந்த வரலாற்று ஆய்வறிஞராக, இரா.கிருஷ்ணமூர்த்தியை, தஞ்சாவூர், கே.என்.ஜி. கலைக் கல்லுாரியின் வரலாற்றுத் துறை தேர்வு செய்து, 1991ல் கேடயம் வழங்கியது. வாரணாசியில் உள்ள இந்திய நாணயவியல் சங்கம், கர்நாடக மாநிலம் தர்மசாலாவில், 1991ல் கருத்தரங்கை நடத்தி, 'சி.எச்.பிடுல்ப்' விருது வழங்கப்பட்டது.இந்திய நாணயவியல் சங்கம், கேரள மாநிலம், எர்ணாகுளத்தில், 1995ல் நடத்திய கருத்தரங்கில், 'டி.தேசிகாச்சாரி' விருது வழங்கி பாராட்டியது.


இதழியலை வளர்க்க உதவி


திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், இதழியல் படிப்புக்கு தனித்துறை உள்ளது. இந்த துறையில், நவீன வகுப்பறை, ஆய்வகம், படிப்பகம், நவீன தொடர்பியல் சாதனங்கள் ஆகியவற்றை பொருத்த வசதியான அறைகள், விவாதக்கூட அரங்கங்கள் உருவாக்கப் போதிய கட்டமைப்பு வசதிகள் போன்றவை தேவைப்பட்டன.இதை அறிந்த இரா.கிருஷ்ணமூர்த்தி போதிய வசதிகளுடன், இதழியல் கட்டடத்தை பெரும் பொருட்செலவில் கட்டி கொடுத்தார். இதற்கு, 'இராமசுப்பையர் கிருஷ்ணமூர்த்தி ஊடகக்கூடம்' என, பெயர் சூட்டி பல்கலை நிர்வாகம் பாராட்டியது.

அந்தக் கட்டடத்தை, 2007 பிப்., 22ல், சக்தி தொழில் குழுமங்களின் தலைவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் திறந்து வைத்தார்.இந்த கட்டடத்தின் விரிவாக்கம் ஒன்றை கட்டுவதற்கு, அரசின், 50 சதவீத நிதியுடன், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, 50 சதவீத நிதி அளித்தார். அந்தக் கட்டடத்தை, 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, 2017 நவ., 22ல் திறந்து வைத்தார். கட்டடத்துக்கு, 'ஆர்.கே. மீடியா பிளாக்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


பழங்குடியினர் உயர்வுக்கு உதவியவர்


டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தியின் கொடை பண்பால் பயன் பெற்றவர்கள் ஏராளம். தன் வாழ்வை மற்றவர்களுக்கும், சமூகத்திற்கும் பயன்மிக்கதாக அவர் அமைத்துகொண்டார். கல்வி நிறுவனங்கள், ஏழை மாணவ, மாணவியர் மற்றும் அறிஞர்கள் வாழ்வில் உயர பொருளாதார உதவிகள் செய்துள்ளார்.

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இருளர் பழங்குடியின குடும்பங்கள் சிலவற்றை காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் என்ற கிராமத்தில், தமிழக அரசு குடியேற்றியது. அவர்களின் மறு வாழ்வுக்கு நிலமும் ஒதுக்கப்பட்டது.அந்த இடத்தில் சிறிய அளவிலான் படிப்பகம் ஒன்றை அமைக்க காஞ்சி மக்கள் மன்றம் என்ற சேவை அமைப்புக்கு பொருளாதார உதவிகள் செய்து பழங்குடியினரின் முன்னேற்ற பணிகளை இரா. கிருஷ்ணமூர்த்தி ஊக்குவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (118)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மார்-202123:48:27 IST Report Abuse
Ramki Marai Malai Nagar 🌸🌹🐙🙏🐙🍀💐அப்துல் கலாம் அன்பை பெற்றவரே!-"தினமலரை"ஆற்றலுடன் அவனியெலாம்-மணம்பரப்ப செய்தவரே!-நாணயத்தின்இயல் நுட்பம் ஆய்ந்து அறிந்தவரே!-கல்வி"ஈடில்லா செல்வம்"இதை உணர்த்த-மாணவர்க்குஉன்னதமாய் "ஜெயித்து காட்டுவோம்!"-நிகழ்ச்சி தந்தவரே!ஊக்கமுடன் "தமிழச்சு மொழி "வளர - நாளும்உழைத்தவரே!"எழுத்துருக்கள்" நவீனமாய்- தமிழுக்கு தந்தவரே!ஏற்றமிகு "செம்மொழி" மகுடம் தமிழன்னை சூடிடவே-நாளும் உழைத்தவரே!ஐயமில்லை!-மறவாது!!இதழியல், எழுத்தியல்!இவ்விரண்டும் தங்களையே!எஃகின் உறுதி கொண்டீர்!சங்க கால "நாணயவியல்"ஆய்வு கண்டீர்!- நாயகரே!எந்நாளும் நிலைத்திருக்கும்!- நிந்தன் புகழ்! - தூயவரே! தொண்டுள்ளம் கொண்டவரே!-யாம் கண்டதொல்காப்பியரே!-"நாளிதழாய்"தினமும்"தினமலர்" தூவும்! - வீடுகளில்!! தமிழ் மனமெல்லாம் "செய்தி மணம்" கமழும்!-,தமிழ் நெஞ்சமெலாம்-நீக்கமறநிலைத்திருப்பீர்!-வாழ்க!வளர்க! உந்தன் புகழ்! 💐🙏🙏🙏🌺என்றென்றும் தினமலரின்அன்பு வாசகர்:ஏ.சி.இராம்கி,ஜெயராம் இல்லம்,291-குலசேகராழ்வார் தெரு,மறைமலை நகர்-603 209.செங்கல்பட்டு -மாவட்டம்.அலைபேசி:9840484104. 🌻👏👏👏👏🍁
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
06-மார்-202123:47:07 IST Report Abuse
sankar நல்ல மனிதர்
Rate this:
Cancel
06-மார்-202108:59:05 IST Report Abuse
உண்மை திரு.லக்ஷ்மிபதி ஐயா அவர்களைப் பற்றி அறிந்த அளவுக்கு கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்களின் சாதனைகளை அறிந்ததில்லை. ஆனால் மிகப்பெரிய சாதனை மனிதராக இவரைப் பற்றி அறிந்த பின்னர் பிரமிப்பு. சமுதாய முன்னேற்றத்திற்கு ஆற்றும் சேவைகள் இறைவனுக்கு செய்யும் சேவைகளே. "சேவிக்கும் கரங்களை விட சேவை செய்யும் கரங்களே மேல்"- பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா. அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தனைகள். ஓம் சாந்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X