சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக - பா.ஜ., கூட்டணி ஒருபுறமும், திமுக - காங்., கூட்டணி ஒருபுறமும் பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் 3வது அணி அமைக்க முயற்சி நடந்து வருகிறது.

மக்கள் நீதி மையத்துடன் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே போன்ற கட்சிகள் கூட்டணி வைக்க உள்ளதாக தெரிகிறது. டில்லியில் ஆட்சி செய்துவரும் ஆம்ஆத்மி கட்சியும் கமல் கட்சியுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், வரும் தமிழக சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE