சென்னை: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இழுபறி நீடித்த நிலையில் 6 தொகுதிகள் ஒதுக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார். இதுவரை திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்தியன் முஸ்லிம் லீக்கிற்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 என மொத்தம் 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக 10 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது: சனாதன பேராபத்தில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டிய யுத்தக்களமாக சட்டசபை தேர்தல் இருக்கும். சனாதன சக்திகளால் தமிழகத்தில் காலூன்ற முடியாததால் வேறு வடிவங்களில் முயற்சித்து வருகின்றனர். தமிழகத்தில் சனாதன சக்திகள் தலையெடுக்க கூடாது என்பதற்காகவும், தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் திமுக கூட்டணியில் விசிக இணைந்துள்ளது. சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை ஆலோசித்து அறிவிக்கப்படும். கூட்டணி குறித்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE