பொது செய்தி

இந்தியா

புதிய பார்லி., கட்டட வளாகத்தில் பிரதமர் இல்லத்தை இணைக்க சுரங்கப்பாதை

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டட வளாகத்தில் பிரதமர், துணை ஜனாதிபதி, எம்பி.,க்களின் அறையை இணைக்கும் சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக சுரங்கப்பாதை அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.'சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட்' என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் திட்டத்தின் கீழ் புதிய பார்லிமென்ட் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த
Underground, Tunnels, NewParliament, Prime Minister, Vice President, Homes, பிரதமர், துணை ஜனாதிபதி, இல்லம், புதிய பார்லிமென்ட், சுரங்கப்பாதை

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டட வளாகத்தில் பிரதமர், துணை ஜனாதிபதி, எம்பி.,க்களின் அறையை இணைக்கும் சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக சுரங்கப்பாதை அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

'சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட்' என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் திட்டத்தின் கீழ் புதிய பார்லிமென்ட் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பிரதமரின் புதிய இல்லம், பிரதமர் அலுவலகம் தெற்கு பிளாக் பகுதியில் வரவிருக்கிறது. துணை ஜனாதிபதி இல்லம் வடக்கு புறத்தில் இருக்கும். அதேபோல், தற்போது இருக்கும் போக்குவரத்து மற்றும் ஷ்ரம் சக்தி பவன்கள் இருக்கும் இடத்தில் எம்.பி.,க்களின் அறைகள் வரவிருக்கிறது. இந்நிலையில், புதிய பார்லி., வளாகத்தில் பிரதமர், துணை ஜனாதிபதி, எம்.பி.,க்களின் அறையை இணைக்கும் சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


சுரங்கப்பாதை அமைப்பதின் பின்னணியில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சுரங்கப்பாதை ஒரு வழிப்பாதையாக இருக்கும். ஆனால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இத்தகைய இணைப்பு தேவையில்லை என்று கட்டட வடிவமைப்பாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் ஜனாதிபதி பார்லிமென்டிற்கு வருவது முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவது மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கும் புதிய பார்லி வளாகத்திற்கும் இடையிலான தொலைவு காரணமாக கூறப்படுகிறது. விவிஐபிக்களின் பாதுகாப்பினால் பொதுமக்கள் புழக்கத்துக்கு இடையூறு ஏற்படுகிறது, இதைத்தவிர்க்கவே சுரங்கப்பாதை அமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. புதிய பார்லிமெண்ட் கட்டடம் 2022-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு தயாராகும் என்று தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
05-மார்-202106:31:55 IST Report Abuse
Elango எந்த முட்டாள் இப்படி பாதுகாப்பு ரகசியங்களை வெளியிடுவது ??
Rate this:
Cancel
தாமரை கருகும் - சென்னை,இந்தியா
05-மார்-202102:13:47 IST Report Abuse
தாமரை கருகும் ஹிட்லர் இதுபோன்ற சுரங்கத்தில் தான் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்தான்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மார்-202100:08:23 IST Report Abuse
தல புராணம் ஏழை தாயின் மகனின் வீட்டுக்கு சுரங்கப்பாதையா?
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
05-மார்-202114:54:32 IST Report Abuse
ShivRam ShivShyamஉளறலின் உச்ச கட்டம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X