பொது செய்தி

இந்தியா

இந்திய அணி அபார பந்துவீச்சு: இங்கிலாந்து 205 ரன்களுக்கு ஆல்அவுட்

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஆமதாபாத்: நான்காவது டெஸ்டில் அக்சர் படேல், சிராஜ் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. பின் எழுச்சி கண்ட இந்திய அணி, அடுத்த இரு டெஸ்டில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில்
INDvENG, Test, Axar, Ashwin, India, England

ஆமதாபாத்: நான்காவது டெஸ்டில் அக்சர் படேல், சிராஜ் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. பின் எழுச்சி கண்ட இந்திய அணி, அடுத்த இரு டெஸ்டில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட், ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. இங்கிலாந்து அணியில் டாம் பெஸ், லாரன்ஸ் தேர்வாகினர். இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் தேர்வானார். ‛டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், ‛பேட்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news


இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே, டாம் சிப்லே ஜோடி துவக்கம் தந்தது. அக்சர் படேல் 'சுழலில்' சிப்லே (2), கிராலே (9) சிக்கினர். முகமது சிராஜ் 'வேகத்தில்' கேப்டன் ஜோ ரூட் (5) அவுட்டானார். பின் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. நான்காவது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்த போது முகமது சிராஜ் பந்தில் பேர்ஸ்டோவ் (28) அவுட்டானார்.


latest tamil news


பொறுப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்தார். இவர், 55 ரன் எடுத்திருந்த போது வாஷிங்டன் சுந்தர் பந்தில் சரணடைந்தார். போப் (29) நிலைக்கவில்லை. லாரன்ஸ் (46) ஆறுதல் தந்தார். போக்ஸ் (1), பெஸ் (3), லீச் (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆண்டர்சன் (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அக்சர் படேல் 4, அஷ்வின் 3, சிராஜ் 2 விக்கெட் கைப்பற்றினர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.TAMILKUMARAN - tiruvannamalai,இந்தியா
04-மார்-202118:11:10 IST Report Abuse
R.TAMILKUMARAN இவனுங்க கதை நாளைக்கு தெரியும்
Rate this:
Cancel
Citizen_India - Woodlands,இந்தியா
04-மார்-202117:49:14 IST Report Abuse
Citizen_India அஷ்வின் 3 விக்கெட் கைப்பற்றினர், How நான்காவது டெஸ்டில் அக்சர் படேல், சிராஜ் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X