இஸ்ரேலைச் சேர்ந்த டீ-.ஐ.டி., என்ற நிறுவனம், ஆழ்மன நினைவலை என்ற பொருள்படும், 'டீப் நோஸ்டால்ஜியா' என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது.செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயங்கும் இந்த நுட்பத்திடம், பழைய புகைப்படம் ஒன்றைக் கொடுத்துவிட்டால், அந்த உருவத்திற்கு அசைவைத் தந்து, கண் சிமிட்டி, சிரிக்கும் சலனப்படமாக மாற்றிக் காட்டி அசத்துகிறது.
தங்களுக்கு பிரியமான, ஆனால், காலமாகிவிட்ட ஒருவரை இதுபோல, சலனப்படமாக பார்க்கும்போது ஏற்படும் பெருமகிழ்ச்சியை அளவிட முடியாது. அதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தி காட்டியுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை, 'மைஹெரிடேஜ்' என்ற நிறுவனம் தன் இணைய தளத்தில் பயன்படுத்த துவங்கிய சில மணி நேரங்களில், 10 லட்சம் பேருக்கு மேல் தங்கள் காலமான உறவினர்களின் படங்களைத் தந்து, அவர்களது அசைவுகள் அடங்கிய படத்துணுக்கை பெற்றுக்கொண்டனர்.
சிலருக்கு, காலமான உறவினரை இப்படி பார்ப்பது பெரும் அதிர்ச்சியை, சங்கடத்தை தரக்கூடும். எனவே, மைஹெரிடேஜ் நிறுவனம், இது எல்லோருக்குமானது அல்ல என, எச்சரிக்கை செய்கிறது.மேலும் இதை சிலர் தவறாக பயன்படுத்துவர் என்பதால், இத்துடன் குரல் சேர்க்கப்படமாட்டாது எனவும் அறிவித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE