பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம்

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே கொரோனா தொற்றிலிருந்து வாக்காளர்களையும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் பாதுகாப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பாக
CastingVote, Mask, Election Commission, Voters, முகக்கவசம், மாஸ்க், தேர்தல் ஆணையம், வாக்காளர்கள்

சென்னை: முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே கொரோனா தொற்றிலிருந்து வாக்காளர்களையும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் பாதுகாப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை விடுத்துள்ளது.


முகக்கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு

latest tamil news



அதாவது, வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யப்பட அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணிநேரத்தில் தேர்தல் ஆணையம் மூலமாக வழங்கப்படும் பிபிஇ கிட்டை அணிந்து வந்து வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
04-மார்-202122:38:15 IST Report Abuse
Visu Iyer ஆன்லைன் தேர்தல் வாக்கு பதிவு முறை வருமா என கேட்கிறீர்களா இந்தியா முழுவதும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு.. ஆன்லைன் தேர்தல் வரும்.. என்று எதிர்பாருங்கள்..
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
04-மார்-202122:33:52 IST Report Abuse
Visu Iyer ஆன்லைனில் ஆப் வழியாக வாக்கு பதியலாம்... வாக்கு பதிந்தவுடன் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும் அதை பதிவு செய்தால் வாக்கு பதிவாகிவிடும்.. நீங்கள் எந்த கட்சிக்கு வாக்கு பதிந்தீர்கள் என்று உங்களுக்கு குறுஞ்செய்தி confirm செய்து வந்து விடும்.. இப்படி ஒரு முறையை இந்த மத்திய அரசு கொண்டு வருமா...?
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
04-மார்-202122:30:04 IST Report Abuse
Visu Iyer இதற்கு பதிலாக ஆன்லைனில் வாக்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆப் போடும் மத்திய அரசு.. வாக்கு பதிய ஒரு ஆப் போட்டால் தான் என்ன.. வாக்கு பதிவாவது நேர்மையாக நடக்கும் தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X