கேரள முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன்: பா.ஜ., அறிவிப்பு

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வர் வேட்பாளராக மெட்ரோமேன் ஸ்ரீதரனை பா.ஜ., அறிவித்துள்ளது.கேரளாவில் வரும் ஏப்.,6ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு ஆட்சியை கைப்பற்ற பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. இங்கு முக்கிய புள்ளியாக கருதப்படும் மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன்(88) பா.ஜ.,வில் இணைய முடிவு செய்தார். டில்லி மெட்ரோவின் முன்னாள் தலைவரான இவர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும்
B.J.P,BJP,Bharatiya Janata Party,kerala,கேரளா,பா.ஜ,sreedharan, ஸ்ரீதரன்.

திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வர் வேட்பாளராக மெட்ரோமேன் ஸ்ரீதரனை பா.ஜ., அறிவித்துள்ளது.

கேரளாவில் வரும் ஏப்.,6ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு ஆட்சியை கைப்பற்ற பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. இங்கு முக்கிய புள்ளியாக கருதப்படும் மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன்(88) பா.ஜ.,வில் இணைய முடிவு செய்தார். டில்லி மெட்ரோவின் முன்னாள் தலைவரான இவர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களில் மூத்த பொறியாளராக பணியாற்றி உள்ளார். கொங்கன் ரயில் திட்டத்தில், இவரது பங்கு முக்கியமானது. பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் பெற்றவர். சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பிரசாரம் துவக்கமாக விஜய் யாத்திரா நடந்து வருகிறது. கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடக்கும் இந்த யாத்திரையில், ஸ்ரீதரன் தன்னை முறைப்படி பா.ஜ.,வில் இணைத்து கொண்டார். அவருக்கு பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன்ஸ்ரீதரன் என அக்கட்சி அறிவித்துள்ளது.


latest tamil news


இது தொடர்பாக சுரேந்திரன் கூறுகையில், மோடி மற்றும் வளர்ச்சி அரசியல் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் மெட்ரோ ஸ்ரீதரனை, முதல்வர் பதவியில் மக்கள் அமர வைப்பார்கள் அவரது திறமையும், அவர் மீதான நம்பிக்கையும் வெல்ல முடியாத ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
05-மார்-202110:51:33 IST Report Abuse
Ramalingam Shanmugam இங்கே திறமைக்கு தான் பதவி வாரிசு அரசியல் இல்லை இங்கே சுடல பப்பு உதய இல்லை
Rate this:
Cancel
Rajah - Colombo,இலங்கை
05-மார்-202110:34:35 IST Report Abuse
Rajah நல்லவர்களுக்கு எப்போதும் பிஜேபி இல் இடமுண்டு .உண்மைதான். அதற்காகத்தானே நல்லவர்களான தியாகத் தீபம் சசிகலாவையும் தினகரனையும் மீண்டும் இனைக்க நினைத்தீர்கள். ஆனால் தியாகதீபம் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டது. அதாவது சிறைப்பறவை மழைக்கு ஒதுங்கி பின்னர் மழை விட்டதும் பறக்க ஆரம்பித்துவிடும்.
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
05-மார்-202109:30:21 IST Report Abuse
thamodaran chinnasamy நமது கேரளா மக்கள் நன்கு படித்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள் , இந்தத்தேர்தலில் அவர்களின் எழுச்சியையைப் பார்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X