புதுடில்லி: ஹிந்து கடவுள்களை அவமதித்ததற்காக தொடரப்பட்ட வழக்கில், அமேசான் பிரைம் நிர்வாகி சுப்ரீம் கோர்ட்டில் முன் ஜாமின் கோரினார். அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஓ.டி.டி., தளங்களுக்கு கண்காணிப்பு அவசியமாகிறது என கூறியது.
தாண்டவ் எனும் இணையத் தொடர் இந்தாண்டு ஜனவரியில் அமேசான் பிரைமில் வெளியானது. வெளியான சில நாட்களிலேயே சர்ச்சையை கிளப்பியது. சிவபெருமான் உள்ளிட்ட ஹிந்து கடவுள்களை அதில் அவமதித்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பான புகார் ஒன்றில் அமேசான் பிரைமின் உள்ளடக்கத்துக்கான தலைவர் அபர்ணா புரோகித் முன் ஜாமின் கோரியிருந்தார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்களுக்கு உள்ள ஒழுங்குமுறைகள் குறித்து மத்திய அரசு அறிக்கை சமர்பிக்கும் படி உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தது. வழக்கை விசாரித்த அமர்வில் இருந்த நீதிபதி ஆர்.எஸ்.ரெட்டி, “சில ஓடிடி இயங்குதளங்கள் அவற்றின் தளங்களில் ஆபாச படங்களை காண்பிக்கின்றன. அவற்றில் ஒரு ஒழுங்கை ஏற்படுத்த வேண்டும். அதற்கு சில வகையான கண்காணிப்புகள் தேவை.” என கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE