மும்பை: பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்த சிந்தி ஹிந்து குடும்பத்தினரால் அந்நாட்டின் கராச்சி நகர பெயருடன் மும்பையில் இயங்கி வந்த பேக்கரி திடீரென மூடப்பட்டுள்ளது. அதற்கு ராஜ் தாக்கரே கட்சி நிர்வாகி பொறுப்பேற்றுள்ளார்.
![]()
|
மும்பையின் பாந்த்ரா பகுதியில் பிரபலமான கராச்சி பேக்கரி 1953-ம் ஆண்டிலிருந்து இயங்கி வந்தது. இதனை பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்த சிந்தி ஹிந்து குடும்பத்தினர் நடத்தினர். பிரிவினையின் போது இவர்கள் ஐதராபாத்தில் தஞ்சமடைந்தனர். அங்கும் கராச்சி பேக்கரி பிரபலமாக உள்ளது. அக்கடையின் பெயர் தேசவிரோதம், தேசபக்திக்கு எதிரானது என கடந்த நவம்பர் மாதம் மஹா., நவநிர்மான் சேனா கட்சி நிர்வாகி அக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
![]()
|
இந்நிலையில் தற்போது பாந்த்ராவில் உள்ள கராச்சி பேக்கரி மூடப்பட்டுள்ளது. அதற்கு மஹா., நவநிர்மான் சேனாவின் துணை தலைவர் சயிப் ஷேக் பொறுப்பேற்று டுவிட் செய்திருந்தார். கட்சியின் மற்றொரு தலைவரான சந்தீப் தேஷ்பாண்டே, அதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என பதிலளித்துள்ளார். கராச்சி பேக்கரி நிர்வாகத்தினர் கொரோனா சூழலால் வருமானம் இழந்து நஷ்டமடைந்ததால் மும்பை கிளையை நடத்த முடியாமல் மூடிவிட்டதாக கூறியுள்ளனர். கராச்சி என்ற பெயர் பிராண்ட் எனவும், பழமையானது அதனை மாற்ற முடியாது என தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement