மியான்மர் ராணுவத்தால் 54 பேர் படுகொலை:ஐநா கண்டனம்

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை எதிர்த்து ஜனநாயக ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்குநாள் அங்கு போராட்டம் அதிகரித்து வருகிறது. இதுவரை 54 போராட்டக்காரர்கள் மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டது உலகையே அச்சுறுத்தியுள்ளது. இதற்கு பல நாட்டுத்

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை எதிர்த்து ஜனநாயக ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்குநாள் அங்கு போராட்டம் அதிகரித்து வருகிறது.



latest tamil news



இதுவரை 54 போராட்டக்காரர்கள் மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டது உலகையே அச்சுறுத்தியுள்ளது. இதற்கு பல நாட்டுத் தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 21-ம் நூற்றாண்டில் நடந்த முக்கியமான இராணுவ அத்துமீறல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஐநா.,வின் மனித உரிமை பிரிவுத் தலைவர் மிஷல் பலசெட் மியான்மர் இராணுவத்தினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஆயிரத்து 300 பேர் கைதாகியுள்ள நிலையில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு நாளுக்குநாள் பலரை பலிவாங்கி வருவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.


latest tamil news




ராணுவம் அத்துமீறல்


ஆக்சன் சுகாய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ராணுவத்தின் அத்துமீறல் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. இரு நாட்டு ராணுவ தாக்குதல்களின்போது காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை தாக்கக்கூடாது என்பது ஐநாவின் விதி.
ஆனால் இந்த விதியைமீறி மியான்மர் ஜனநாயக ஆதரவாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவந்த மருத்துவ ஊழியர்களும் ராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு மிஷல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகில் மனித உரிமைமீறல் எங்கு நடந்தாலும் அதனை எதிர்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் இதற்கு உலக நாடுகள் இணைந்து தீர்வை கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
05-மார்-202116:31:05 IST Report Abuse
S.P. Barucha தொட நடுங்கி இந்தியா
Rate this:
Cancel
05-மார்-202111:03:15 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்தது தானே சீனாக்காரனால் பல்லு புடுங்கப்பட்ட இந்த சபை
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
05-மார்-202104:25:04 IST Report Abuse
blocked user சீனா அருகில் இருக்கும்வரை இது போன்ற நாடுகளை ஒரு பொழுதும் நிம்மதியாக இருக்க விடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X