ஓ.டி.டி., தளத்தில் ஆபாசம்: உச்ச நீதிமன்றம் வேதனை

Updated : மார் 06, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (6+ 7)
Share
Advertisement
புதுடில்லி: ஓ.டி.டி., எனப்படும், இணைய பொழுதுபோக்கு தளங்களில், ஆபாசக் காட்சிகள், அதிகம் இடம்பெறுவதாக, உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துஉள்ளது.'அமேசான் பிரைம்' என்ற, ஓ.டி.டி., தளத்தில், 'தாண்டவ்' என்ற, இணைய தொடர் வெளியாகி உள்ளது. இந்தத் தொடரின் காட்சிகள், ஹிந்துக் கடவுள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்
ஓ.டி.டி., ஆபாசம், உச்ச நீதிமன்றம், வேதனை

புதுடில்லி: ஓ.டி.டி., எனப்படும், இணைய பொழுதுபோக்கு தளங்களில், ஆபாசக் காட்சிகள், அதிகம் இடம்பெறுவதாக, உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துஉள்ளது.

'அமேசான் பிரைம்' என்ற, ஓ.டி.டி., தளத்தில், 'தாண்டவ்' என்ற, இணைய தொடர் வெளியாகி உள்ளது. இந்தத் தொடரின் காட்சிகள், ஹிந்துக் கடவுள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.

இந்த இணையத் தொடரை வெளியிடும், அமேசான் பிரைம் தளத்தின், இந்தியப் பிரிவு தலைவர் அபர்ணா புரோஹித் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது முன்ஜாமின் மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அதை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:ஓ.டி.டி., தளங்களில், ஆபாச காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை. ஓ.டி.டி., தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து, மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அந்த புதிய கட்டுப்பாடு கள் குறித்த தகவலை, தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின்பே, முன்ஜாமின் மனு மீது, விசாரணை நடக்கும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இந்த வழக்கு, மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-மார்-202118:55:41 IST Report Abuse
ஆப்பு இவிங்களுக்கு டிஜிட்டல் இந்தியா வேணும்...
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
05-மார்-202107:29:39 IST Report Abuse
 N.Purushothaman சில தினங்களுக்கு முன்பு பி பி சி ரேடியோவில் நேரலை விவாதத்தில் இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாக சர்ச்சைக்குரிய சர்தாரை அந்த விவாதத்தில் பங்கேற்க வைத்து அவனோ நேரலை என்று கூட பாராமல் இந்திய பிரதமரையும் அவரின் தாயையும் கீழ்த்தரமான சொற்களால் விமர்சித்தான் ...தமிழக இடது சாரி ஊடகங்களில் இந்த செய்தி வரவேயில்லை ...இது தான் இவிங்களின் நடுநிலை ....அதே போல இங்குள்ள ஓ டீ டீ தளங்களில் இந்து தர்மத்தை பற்றியும் இந்து கடவுள்களை பற்றியும் எப்படி வேண்டுமானாலும் சீரியல் எடுக்கலாம் ...அது தவறில்லை ..அப்படி எதிர்ப்பு எழுந்தாலும் மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகிடும் என்கிற நினைப்பில் சில தளங்கள் மிகவும் அருவருக்க தக்க வகையிலும் ஆபாசமாகவும் தொடர்களை வெளியிடுகிறார்கள் ...கேட்டால் ஊடக சுதந்திரமாம் ...இவனுங்களுக்கு முட்டு கொடுக்குற இடதுசாரி ,லிபரல்கள் ,பிரிவினைவாதிகள் எப்பேர்ப்பட்ட கொடூர எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுவும் இவர்களின் இந்து மற்றும் இந்திய வெறுப்பு எவ்வளவு உச்சத்தில் உள்ளது என்பதும் தெளிவாகிறது ...
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
05-மார்-202118:45:01 IST Report Abuse
Nallavan Nallavanநன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் .............
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
05-மார்-202104:10:36 IST Report Abuse
blocked user இனையம் என்பதன் பிரதான நோக்கமே நோ தணிக்கை. அதை பல நாட்டு அரசுகள் கட்டுப்படுத்த முயன்று படுதோல்வி அடைத்துவிட்டன... நீதிமன்றத்தால் நீதிபதிகளையே கட்டுப்படுத்த முடியவில்லை. இணையத்தை கட்டுப்படுத்த முயல்வது வெட்டி வேலை.
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
05-மார்-202118:46:12 IST Report Abuse
Nallavan Nallavanபார்க்கத் தகாததை, பிராக்சி உபயோகித்துப் பார்த்துவிடுகிறார்கள் ..............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X