பொது செய்தி

தமிழ்நாடு

வாழ்வதற்கு சிறந்த நகரங்களுக்கான பட்டியலில் சென்னை

Updated : மார் 06, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (5+ 7)
Share
Advertisement
புதுடில்லி : மத்திய அரசு வெளியிட்டுள்ள, வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில், கர்நாடகாவின் பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில், சென்னைக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. கோவை, சேலம், வேலுார், திருச்சியும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், வாழ்வதற்கு சிறந்த, 111 நகரங்களின் பட்டியலை, மத்திய அரசின் வீட்டுவசதி
 வாழ்வு, சிறந்த நகரங்கள், பட்டியல்,சென்னை,  கோவை, ,

புதுடில்லி : மத்திய அரசு வெளியிட்டுள்ள, வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில், கர்நாடகாவின் பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில், சென்னைக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. கோவை, சேலம், வேலுார், திருச்சியும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், வாழ்வதற்கு சிறந்த, 111 நகரங்களின் பட்டியலை, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹரிதீப் சிங் பூரி, நேற்று வெளியிட்டார்.


ஓட்டெடுப்பு


கடந்த, 2020ம் ஆண்டில், சிறந்த நிர்வாகம், சுகாதாரம், பாதுகாப்பு, பொருளாதாரம், குடிநீர், கழிவுநீர் வசதிகள் உட்பட, 15 அம்சங்களின் அடிப்படையில், இதற்கான ஓட்டெடுப்பு நடந்தது.நாடு முழுதும், 2020ல், ஜன., 16 முதல், மார்ச் 20 வரை நடந்த கருத்துக் கணிப்பில், 32.2 லட்சம் மக்கள், தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும், இந்த, 15 அம்சங்களின் அடிப்படையில், நிபுணர்கள் குழு, பட்டியலை தயாரித்துஉள்ளது.அதன்படி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உடைய, 49 நகரங்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை உடைய, 62 நகரங்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், கர்நாடக மாநிலம், பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது. புனே, ஆமதாபாத், சென்னை, சூரத், நவி மும்பை, கோயம்புத்துார், வதோதரா, இந்துார், கிரேட்டர் மும்பை, அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.இந்தப் பட்டியலில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள நகரங்களில், டில்லி, 13வது இடத்தையும், ஸ்ரீநகர் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.மக்கள் தொகை, 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ள நகரங்கள் பட்டியலில், சிம்லா முதலிடத்தைப் பிடித்துள்ளது.


பட்டியல்


புவனேஸ்வர், சில்வாசா, காக்கிநாடா, சேலம், வேலுார், காந்திநகர், குர்கான், தாவனகரே, திருச்சி நகரங்கள், அடுத்த இடங்களில் உள்ளன. இந்த, 62 நகரங்கள் பட்டியலில், முசாபர்நகர், கடைசி இடத்தில் உள்ளது. இதைத் தவிர, சிறந்த மாநகராட்சிக்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.


அதில், 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை உள்ள நகரங்களில், புதுடில்லி நகராட்சி கவுன்சில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருப்பதி, காந்திநகர், கர்னால், சேலம், திருப்பூர், பிலாஸ்புர், உதய்புர், ஜான்சி, திருநெல்வேலி இடம்பெற்று உள்ளன.

அதே நேரத்தில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள நகரங்களில், சிறப்பாக செயல்படும் மாநகராட்சிகளில், இந்துார் முதலிடத்தில் உள்ளது. சூரத், போபால், பிம்ப்ரி சிஞ்சவாத், புனே, ஆமதாபாத், ராய்ப்பூர், கிரேட்டர் மும்பை, விசாகப்பட்டினம், அதற்கடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (5+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-மார்-202118:54:13 IST Report Abuse
ஆப்பு மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்... அடி ஆத்தாடியோ...
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
05-மார்-202113:46:47 IST Report Abuse
Yezdi K Damo As per Indian standard,this so called survey.
Rate this:
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
05-மார்-202113:05:34 IST Report Abuse
சொல்லின் செல்வன் பெங்களூர்ல வாழ்ற மக்கள் கிட்ட கருத்துக்கணிப்பு எடுத்துப்பாருங்க. தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X