திருவனந்தபுரம்:கேரள சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக, 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரனை, பா.ஜ., அறிவித்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம், 6ல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.கேரளாவில் மிகவும் பிரபலமான, மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன், 88, பா.ஜ.,வில், கடந்த மாதம் சேர்ந்தார்.
டில்லி மெட்ரோவின் முன்னாள் தலைவரான இவர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களில், மூத்த பொறியாளராக பணியாற்றி உள்ளார். கொங்கன் ரயில் திட்டத்தில், இவரது பங்கு முக்கியமானது. பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் பெற்றவர்.
பா.ஜ.,வில் சேர்ந்த பின், ஸ்ரீதரன் கூறுகையில், 'கேரளாவில், பா.ஜ., ஆட்சி அமைந்தால், முதல்வர் பதவியேற்க தயார்' என்றார்.இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரனை, பா.ஜ., அறிவித்துள்ளது.இது பற்றி, கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் கூறுகையில், ''கேரள சட்டசபை தேர்தலை, ஸ்ரீதரன் தலைமையில், பா.ஜ., சந்திக்கும். பா.ஜ., ஆட்சி அமைந்தால், முதல்வராக, ஸ்ரீதரன் பொறுப்பேற்பார்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE