அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிட பிரேமலதா விருப்ப மனு

Added : மார் 04, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:சட்டசபை தேர்தலில் போட்டியிட, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, விருப்ப மனு அளித்துள்ளார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல் நலம் பாதிப்பால், வீட்டில் ஓய்வில் உள்ளார். எனவே, கட்சி பணிகளை, விஜயகாந்த் மனைவி பிரேமலதா கவனித்து வருகிறார். அவருக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,விற்கு, 29 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். சட்டசபை
 தேர்தலில் போட்டியிட பிரேமலதா விருப்ப மனு

சென்னை:சட்டசபை தேர்தலில் போட்டியிட, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, விருப்ப மனு அளித்துள்ளார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல் நலம் பாதிப்பால், வீட்டில் ஓய்வில் உள்ளார். எனவே, கட்சி பணிகளை, விஜயகாந்த் மனைவி பிரேமலதா கவனித்து வருகிறார். அவருக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,விற்கு, 29 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். சட்டசபை எதிர்க்கட்சியாகவும் இருந்தது.

2016 சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து, படுதோல்வி அடைந்தது. சட்ட சபையில், மீண்டும் குரல் ஒலிக்க, பிரேமலதா போட்டியிட வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர். அதை, அவர் ஏற்றுள்ளார். சென்னையில், கட்சி தலைமை அலுவலகத்தில், அவர் விருப்ப மனு தாக்கல் செய்தார்.அதற்கு முன், கட்சி அலுவலகத்தின் வெளியே உள்ள விநாயகரை வணங்கி, நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டார்.

எந்த தொகுதியில் போட்டி என்ற விபரத்தை, பிரேமலதா தெரிவிக்கவில்லை. கடலுார் மாவட்டம், விருத்தாச்சலம் அல்லது விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. கணவர் விஜயகாந்த், ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகள் என்பதால், இரண்டையும் தேர்வு செய்துள்ளார், பிரேமலதா என்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-மார்-202118:27:05 IST Report Abuse
Malick Raja வாரிசு கட்சி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நடைமுறைக்கு கொண்டுவந்த தேமுதிக .. அருமை அருமை .. வாக்குகளையும் நீங்களே போட்டுக்கங்க .. என்னத்துக்கு வெளியில் சொல்லணும் .. ஆமாங்கோ வீட்டுக்குள்ள்ளேயே முதல்வர் து .முதல்வர் என்று இருந்துகிட்டா பொதுமுங்கோ
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
05-மார்-202121:36:23 IST Report Abuse
RaajaRaja Cholan நல்லவர் விஜயகாந்துக்கு என்ன பிரச்னை , சரி பண்ண தொடர்ந்து முயற்சி பண்ணுறாங்கலா தெரியலைத்தாயே , ஒன்றும் முடியவில்லை என்றால் ஆயுர்வேதத்தை ஒரு முயற்சியை செய்து பார்க்கலாம் . விஜயகாந்த் பழைய பன்னீர் செல்வமாய் வரவேண்டும் . அவர் குடும்பத்திலுளள பேராசை கோட்ட்டம் வேண்டாம்
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
05-மார்-202121:34:25 IST Report Abuse
RaajaRaja Cholan அப்புறம் எப்படி எல்லா தொகுதிக்கும் எப்படி வேட்பாளர் ஆள் சேர்க்கிறதாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X