அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் நேர்காணல் நிறைவு: அ.தி.மு.க.,வில் இன்று 'லிஸ்ட்?'

Updated : மார் 05, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஒரே நாளில், விருப்ப மனு தாக்கல் செய்த, 7,000க்கும் மேற்பட்டோருக்கு, நேர்காணல் நடந்தது.சட்டசபை பொது தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, கட்சி தலைமை அலுவலகத்தில், பிப்., 24ல் விருப்ப மனு வினியோகம் துவங்கியது; நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மொத்தம், 8,200 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட, 7,000
 ஒரே நாளில் நேர்காணல் நிறைவு: அ.தி.மு.க.,வில் இன்று 'லிஸ்ட்?'

சென்னை:அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஒரே நாளில், விருப்ப மனு தாக்கல் செய்த, 7,000க்கும் மேற்பட்டோருக்கு, நேர்காணல் நடந்தது.

சட்டசபை பொது தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, கட்சி தலைமை அலுவலகத்தில், பிப்., 24ல் விருப்ப மனு வினியோகம் துவங்கியது; நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மொத்தம், 8,200 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட, 7,000 பேருக்கு, நேற்று ஒரே நாளில் நேர்காணல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.


latest tamil newsகாலை, 8:45 மணிக்கு, முதல்வர் பழனிசாமியும், 8:50 மணிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வந்தனர்.விருப்ப மனு அளித்த ரசீதுடன் வந்தவர்கள் மட்டும், அலுவலகம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒலிபெருக்கி வாயிலாக, நேர்காணல் நடக்கும் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டன. முதலில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு, விருப்ப மனு அளித்தவர்கள், அலுவலகத்தின் முதல் மாடிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட தொகுதிகளுக்கு, விருப்ப மனு அளித்தவர்கள், கீழே அமர வைக்கப்பட்டனர். முதல் பிரிவுக்கு நேர்காணல் முடிந்ததும், அடுத்த மாவட்டத்தினர் அனுமதிக்கப்பட்டனர்.ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., தலைமையில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணி செயலர் வளர்மதி, மருத்துவ அணி செயலர் வேணுகோபால் முன்னிலையில், நேர்காணல் நடந்தது.

அ.தி.மு.க.,வில், கூட்டணி பேச்சு, இன்னமும் நிறைவடையவில்லை. எனினும், இன்று முதல் கட்டமாக, ஐந்து தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிட, கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் தொகுதிகள், ஒரு கிறிஸ்துவர், ஒரு முஸ்லிம், ஒரு பெண் என, ஐந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.


நேர்காணல் எதற்கு?

'முக கவசம் அணிந்து வர வேண்டும்; மொபைல் போன் எடுத்து வரக் கூடாது' என, நேர் காணலின் போது அறிவிக்கப்பட்டது. அதை ஏற்று, நேர்காணலுக்கு வந்தவர்கள், தங்கள் மொபைல் போனை, உடன் வந்தவர்களிடம் கொடுத்து விட்டு சென்றனர். வெளியில் வந்த பின், அவர்களை தேட சிரமப்பட்டனர். இரவல் போன் வாங்கி, தங்களுடன் வந்தவர்களை தொடர்பு கொண்டனர்.

இது தொடர்பாக, நேர்காணலுக்கு வந்தவர்களில் சிலர் கூறுகையில், 'ஒரே அறையில், 400க்கும் மேற்பட்டோரை அமர வைத்து பேசினர். யாருக்கு, 'சீட்' வழங்கப்படுகிறதோ, அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கூறினர். இதற்கு நேர்காணல் நடத்தாமல், அறிக்கை விட்டிருக்கலாம்' என்றனர்.


சுண்டல் விற்பனை!

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று முன்தினம் விருப்ப மனு கொடுக்க, கடைசி நாள் என்பதால், ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். நேற்று நேர்காணல் என்பதால், ஆயிரக் கணக் கானோர் குவிந்தனர். எனவே, சுண்டல், நிலக்கடலை, சமோசா வியாபாரிகள், அங்கே குவிந்தனர்; வியாபாரமும் களைகட்டியது.'செல்பி'நேர்காணல் முடிந்ததும், ஜெயலலிதா நினைவிடம் சென்றனர். உள்ளே அனுமதி இல்லாததால், நுழைவு வாயிலில் நின்று, 'செல்பி' புகைப்படம் எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
234 லட்சியம் 200 வெற்றி நிட்சயம் - DMK வெற்றிக்கு பாடுபடுவோம் ,வாலிஸ் புட்டுனா
05-மார்-202112:14:31 IST Report Abuse
234 லட்சியம்  200 வெற்றி நிட்சயம் இவர் தான் ALL PASS case ஆயிற்றே பின்ன எப்படி இருப்பர்
Rate this:
Cancel
05-மார்-202111:51:00 IST Report Abuse
தமிழ் பலே பலே.... நேர்காணல் அப்படின்றபேர்ல பொதுக்குழு கூட்டியிருக்காங்க. பொதுக்குழுவுக்கு வந்தவங்க எல்லாருக்கும் சுண்டல் வேர்க்கடலை இன்னபிற ஐட்டங்களெல்லாம் சரியா போய் சேர்ந்துச்சா.
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
05-மார்-202109:53:04 IST Report Abuse
T.sthivinayagam பிறகு ஸ்டார் ஹோட்டலில் பார்த்து கொள்ளலாம்
Rate this:
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
05-மார்-202111:47:17 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் இல்லை சேட்டு சொன்னவுடன் மாற்றம் வந்து கொண்டே இருக்கும் பாருங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X