சிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: 'கொரோனா பெருந்தொற்று காலத்தில், அரசு மருத்துவமனைகளை போலவே, தனியார் மருத்துவமனைகளும், முதியோருக்கான சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார், உச்ச நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார்.அதில், கொரோனா பெருந்தொற்று

புதுடில்லி: 'கொரோனா பெருந்தொற்று காலத்தில், அரசு மருத்துவமனைகளை போலவே, தனியார் மருத்துவமனைகளும், முதியோருக்கான சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.



latest tamil news


காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார், உச்ச நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார்.அதில், கொரோனா பெருந்தொற்று காலத்தில், மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பில், அதிக அக்கறை செலுத்த, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரினார்.இது தொடர்பான வழக்கில், 'மூத்த குடிமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில், அரசு மருத்துவமனைகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 'முதியோருக்கான மருந்து, முக கவசங்கள் உள்ளிட்டவற்றை, மாநில அரசுகள் முறையாக வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 'உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியது தொடர்பாக, ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள், விபரம் சமர்ப்பிக்கவில்லை' என, வழக்கறிஞர் அஸ்வினி குமார், உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.மேலும், உச்ச நீதிமன்றத்தின், முந்தைய உத்தரவை நிறைவேற்றுவது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை புதிதாக வெளியிட, உத்தரவிடக் கோரினார்.


latest tamil news


இதையடுத்து, தங்கள் முந்தைய உத்தரவில் சிறிய மாற்றம் செய்து, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.அதில், 'அரசு மருத்துவமனைகளைப் போலவே, தனியார் மருத்துவமனைகளும், முதியோரை அனுமதிப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. மேலும், முந்தைய உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளும் அறிக்கை சமர்ப்பிக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
05-மார்-202109:10:05 IST Report Abuse
 Muruga Vel வாக்சின் போட்டு நாப்பத்தஞ்சு நாள் டாஸ்மாக் பக்கம் போகக்கூடாது ...எந்த மொபைல் நம்பரில் வாக்சினுக்கு ரிஜிஸ்டர் பண்ணறாங்களோ அந்த மொபைல்ல OTP வந்தா தான் சரக்கு விக்கணும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X