எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ரூ.10.35 கோடி ரொக்கம் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Updated : மார் 05, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை வாகன சோதனையில் 10.35 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன'' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலுக்கு இரண்டு சிறப்பு செலவின பார்வையாளர்களாக ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரிகள் மது மகாஜன் பாலகிருஷ்ணன்; சிறப்பு
பறிமுதல், தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு

சென்னை : ''தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை வாகன சோதனையில் 10.35 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன'' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலுக்கு இரண்டு சிறப்பு செலவின பார்வையாளர்களாக ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரிகள் மது மகாஜன் பாலகிருஷ்ணன்; சிறப்பு போலீஸ் பார்வையாளராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தர்மேந்திர பிரதாப் ஒரு சிறப்பு பொதுப் பார்வையாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலோக்வரதன் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில் தமிழகம் வர உள்ளனர்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று முன்தினம் வரை மொத்தம் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குக்கர் சேலை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரொக்கம் 10.35 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. முதன் முதலாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.விரைவு தபாலில் வீட்டிற்கும் அடையாள அட்டை அனுப்பப்படும். மொத்தம் 21 லட்சம் புதிய வாக்காளர்களில் நான்கு லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யாததால் சிறப்பு முகாம் நடத்தப் படுகிறது.

பதிவிறக்கம் செய்த மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை 'பிரிண்ட் அவுட்' எடுத்து ஓட்டளிக்க பயன்படுத்தலாம்; voterportal.eci.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டளிக்க மருத்துவ குழு அனுமதித்தால் அவர்கள் உரிய பாதுகாப்பு கவசத்துடன் வந்து ஓட்டளிக்கலாம். பாதுகாப்பு கவச உடையை தேர்தல் கமிஷன் வழங்கும்.இவ்வாறு சத்யபிரதா சாஹு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
05-மார்-202116:38:54 IST Report Abuse
Endrum Indian அப்போ ரூ 1035 கோடியில் ரூ 10.35 கோடி தான் பிடித்திருக்கின்றார்கள் என்று பட்டவர்த்தனமாகத்தெரிகின்றது
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
05-மார்-202111:02:22 IST Report Abuse
Matt P இவ்வளவு தான் புடிசீன்களா? ...தேர்தலுக்குமுன்தின நாள் அவசரம் அவசரமா திராவிட கட்சிக்கல் கர்ணன் பரம்பரையா வழங்குமே ...அதய யெல்லாம் பிடிச்சிருவீங்களா?...ரொக்கமெல்லாம் ஏன் பக்கம் என்று மக்கள் மகிழ்சியா இருக்கும் நாள் என்று மக்கள் மகிழ்ச்சியை கெடுக்க வேண்டாம் என்பீர்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X