பொது செய்தி

தமிழ்நாடு

மாபெரும் சபைதனில்....

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ண மூர்த்தி நினைவலைகள்'தமிழ் உள்ளளவும் நினைவுகூரப்படுவார்' கல்வெட்டியலை போலவே தொல்லியலின் பிற துறைகளான நாணயவியல், அகழாய்வு முதலானவற்றிலும், தமிழகத்தில் இப்போது பல்வேறு முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்க கால காசுகள் கிடைக்கவில்லை. மீன்,
மாபெரும் சபைதனில்....


தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ண மூர்த்தி நினைவலைகள்
'தமிழ் உள்ளளவும் நினைவுகூரப்படுவார்'latest tamil news
கல்வெட்டியலை போலவே தொல்லியலின் பிற துறைகளான நாணயவியல், அகழாய்வு முதலானவற்றிலும், தமிழகத்தில் இப்போது பல்வேறு முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்க கால காசுகள் கிடைக்கவில்லை. மீன், புலி ஆகியவை பொறித்த சில சதுரமான காசுகள் கிடைத்தன. ஆனால், அவை சங்க காலத்தை சேர்ந்தவை என, உறுதியாக கூற முடியவில்லை.


latest tamil news


Advertisementஇந்நிலையில், 1987ல், கிருஷ்ணமூர்த்தி, முதன் முதலாக கண்டுபிடித்து வாசித்தளித்த, பாண்டியன் பெருவழிக்காசு தமிழக நாணவியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது.
அவர் கண்டுபிடித்து வெளியிட்ட மாக்கோதை, குட்டுவன்கோதை என்ற சேர மன்னர்களின் பெயர்கள் பொறித்த வெள்ளி காசுகள் வரலாற்று அறிஞர்கள் இடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
சங்க கால காசுகள் அனைத்தையும் தொகுத்து, ஆங்கிலத்தில் ஒரு பெரும் நுாலாக வெளியிட்டு, உலக அரங்கில் தமிழ் பண்பாட்டின் பெருமையை உணர்த்தியதில், கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது.


latest tamil news
உலகளவில் புகழ்பெற்ற நாணவியல் அறிஞர் பேராசிரியர் பொப்பே ஆராச்சியிடம், 'தமிழகத்தில் நடந்து வரும் நாணவியல் ஆராய்ச்சிகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள், குறிப்பாக கிருஷ்ணமூர்த்தி மேற்கொண்டு வரும் ஆய்வுகள் பற்றிய உங்களது மதிப்பீடு என்ன' என்று கேட்டேன்.


latest tamil newsஅதற்கு, 'நான் கிருஷ்ணமூர்த்தியை நன்கு அறிவேன். அவரது ஆய்வுகள் முக்கியமானவை. அவர் இந்த துறையில் சிறந்த ஞானம் உள்ளவர். தமிழகத்தை பொறுத்தமட்டில், அவர் தான் இந்த துறையின் முன்னோடி என்று சொல்லலாம். அவர் எழுதியிருக்கும் நுால்களும் முக்கியமானவை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரை தவிர வேறு யாரும் நாணவியல் துறையில் ஆர்வம் காட்டவில்லை' என்றார்.


latest tamil news


தமிழ் இதழியலுக்கும், எழுத்துருக்களை உருவாக்கவும், அவர், பல்வேறு பங்களிப்புகளை செய்துள்ளார். தமிழ் உள்ளளவும், அந்த பெருந்தகை நினைவுகூரப்படுவார். ரவிக்குமார், எம்.பி.,


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jawahar - Nagapattinam,இந்தியா
05-மார்-202120:54:01 IST Report Abuse
jawahar ஐயா அவர்களின் சேவை தமிழ் உள்ளவரை மறையாது, அன்னாரின் ஆன்மா இறையடி சேர பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X