'எச்-1பி' விசா மசோதா: அமெரிக்க பார்லியில் தாக்கல்

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
வாஷிங்டன்: 'எச் - 1பி விசா'வை பயன்படுத்தி, குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியில் நியமிப்பதை தடுக்க, அமெரிக்க பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு, 'எச் - 1பி' மற்றும் 'எச்4' விசாக்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, எச் - 1பி விசா, வெளிநாடுகளில் இருந்து, வேலை தொடர்பாக அமெரிக்காவுக்கு

வாஷிங்டன்: 'எச் - 1பி விசா'வை பயன்படுத்தி, குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினரை பணியில் நியமிப்பதை தடுக்க, அமெரிக்க பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு, 'எச் - 1பி' மற்றும் 'எச்4' விசாக்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, எச் - 1பி விசா, வெளிநாடுகளில் இருந்து, வேலை தொடர்பாக அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.



latest tamil news




இந்த விசாவை பயன்படுத்தி, இந்தியர்களும், சீனர்களும் தான், அமெரிக்காவில் அதிகமாக பணியாற்றி வருகின்றனர். இந்த விசா வாயிலாக, வெளிநாட்டினரை, குறைந்த சம்பளத்தில் பணியில் நியமிப்பதாக, அமெரிக்க நிறுவனங்கள் மீது, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில், குடியரசு கட்சி எம்.பி.,க்கள் ப்ரூக்ஸ், கேட்ஸ், லான்ஸ் கோடன் ஆகியோர், மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்;


latest tamil news


அதில் கூறப்பட்டுள்ளதாவது: எச் - 1பி விசாவை பயன்படுத்தி, பல நிறுவனங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை, குறைந்த சம்பளத்தில் பணியில் அமர்த்துகின்றன. இதனால், அமெரிக்கர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், எச் - 1பி விசா மூலம் வெளிநாட்டினரை பணியில் அமர்த்தும், நிறுவனங்களின் உரிமையாளர்கள், அவர்களுக்கு அமெரிக்கர்களை விட அதிக சம்பளம் வழங்குவதை, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
05-மார்-202114:54:50 IST Report Abuse
S.Baliah Seer "அமெரிக்கர்களுக்கு கொடுப்பதைவிட அதிக சம்பளம் வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கவேண்டும் " இந்த வார்த்தையின் அடிப்படையில் பார்த்தால் பாதிக்கு மேற்பட்ட இந்தியர்கள் தம் வேலையை இழப்பார்கள்.எந்த ஒரு கம்பெனியும் குறைந்த ரேட்டுக்குத்தான் ஆளைப்பிடிப்பார்கள்.
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
05-மார்-202110:13:35 IST Report Abuse
Charles இதை உடனடியாய் நிறைவேற்ற வேண்டும் இந்தியர்கள் பயனடைவார்கள்
Rate this:
Cancel
05-மார்-202108:51:39 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரு உள்ளூர் ஆளை வேலைக்கு வைத்தால் அவரை மேற்பார்வை செய்ய அல்லது அவர் செய்யும் தவறுகளைத் திருத்த இரண்டு அந்நியர்களைப்😫 போட வேண்டும். இதுதான் வளைகுடா லட்சணமும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X