பொது செய்தி

தமிழ்நாடு

தரை மட்டத்திற்கு சென்ற வீடு 5 அடி உயரம் தூக்கி நிறுத்தம்

Added : மார் 05, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கடலுார் :கடலுாரில், சாலை மட்டத்தைவிட, தாழ்வாக உள்ள வீட்டை, 5 அடி உயரத்திற்கு, 'ஜாக்கி' உதவியுடன் துாக்கி நிறுத்தும் பணி நடக்கிறது.கடலுார், மேற்கு வேணுகோபாலபுரத்தில் வசிப்பவர் குருநாதன், 65; அரிசி வியாபாரி. இவரது கான்கிரீட் வீடு, தரைத்தளம், 1,700 சதுர அடி, முதல் தளம், 900 சதுர அடி என, மொத்தம், 2,600 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட, 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த வீடு,
 தரை மட்டத்திற்கு சென்ற வீடு  5 அடி உயரம் தூக்கி நிறுத்தம்

கடலுார் :கடலுாரில், சாலை மட்டத்தைவிட, தாழ்வாக உள்ள வீட்டை, 5 அடி உயரத்திற்கு, 'ஜாக்கி' உதவியுடன் துாக்கி நிறுத்தும் பணி நடக்கிறது.
கடலுார், மேற்கு வேணுகோபாலபுரத்தில் வசிப்பவர் குருநாதன், 65; அரிசி வியாபாரி. இவரது கான்கிரீட் வீடு, தரைத்தளம், 1,700 சதுர அடி, முதல் தளம், 900 சதுர அடி என, மொத்தம், 2,600 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட, 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த வீடு, அவ்வப்போது சாலைகள் போடப்பட்டதில், 2 அடி பள்ளத்திற்கு போனது. இதனால், மழைக்காலத்தில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.
வீட்டை இடிக்காமல் மேலே உயர்த்த முடிவு செய்த குருநாதன், சென்னையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தை அணுகினார். தனியார் நிறுவன ஊழியர்கள், 25க்கும் மேற்பட்டோர், 120 ஜாக்கிகளின் உதவியுடன், வீட்டை, 5 அடி உயர்த்தி, இரும்பு தண்டவாளத்தின் மீது நிறுத்தியுள்ளனர். இதை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
குருநாதன் கூறுகையில், ''12 லட்சம் ரூபாய் செலவில், வீட்டை உயர்த்தும் பணி நடக்கிறது. தொழிலாளர்கள் இங்கு தங்கி, ஒரு மாதமாக பணியில் ஈடுபடுகின்றனர். இரண்டு மாதங்களில், பணிகள் முடிந்து விடும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் சென்னையில் பல இடங்களை நடந்துள்ளது எங்கள் பக்கத்து தெருவில் நண்பர் தனது மூன்றடுக்கு வீட்டை தற்போதிருக்கும் சாலை மட்டத்தைவிட ஐந்தடி உயரமாக தூக்கி விட்டார்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-மார்-202102:21:52 IST Report Abuse
தமிழவேல் அதெப்படி ரோடு போடும்போது, ரோட்டை சுரண்டாமல் மேலும் மேலும் போடுகின்றார்கள் ? ஒவ்வொரு முறை இவனுவோ ரோடு போடும்போதும், வீடுகளை தூக்கவா முடியும் ? கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்.
Rate this:
Cancel
Veejay - Unknown,இந்தியா
05-மார்-202112:19:33 IST Report Abuse
Veejay இன்னும் கொஞ்ச நாளில் கடலூர் மாவட்டத்தின் எல்லா வீடுகளுக்கும் இதே நிலை தான் இருக்கும். அந்த அளவுக்கு ஒவ்வொரு முறையும் சாலையின் உயரத்தை அதிகப்படுத்தி போடுகிறார்கள். சாலை போடும்போது பழைய சாலையின் உயரத்திற்கே தான் போடவேண்டும் என்று அரசும் சொல்லிவிட்டது, கோர்ட்டும் சொல்லிவிட்டது. ஆனால், இந்த மாவட்டத்து அரசியல்வாதிகள் அதை கேட்பதாக இல்லை. இன்னும் சில வருடங்களில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தே நேராக சாலையில் இறங்கி நடக்கும் அளவுக்கு ஒவ்வொரு வருடமும் சாலையின் உயரத்தை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். கேட்டாலும் பதில் அளிப்பதில்லை. மிரட்டல் மட்டுமே வரும். ம்ம்ம்ம்ம்.....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மார்-202122:41:45 IST Report Abuse
தல புராணம்பயணிசாமி சம்பந்தி கிட்டே தான் கெஞ்சனும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X