இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்தாஜ்மஹால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைதுஆக்ரா: தாஜ் மஹாலில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர்.குண்டுவெடிப்பு: 3 வீரர்கள் பலிராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், நக்சலைட்டுகள்
today, crime, round up, இன்றைய கிரைம், ரவுண்ட் அப்



இந்திய நிகழ்வுகள்

தாஜ்மஹால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
ஆக்ரா: தாஜ் மஹாலில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

குண்டுவெடிப்பு: 3 வீரர்கள் பலி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்குச் சென்ற போது, நக்சலைட்டுகள் நடத்திய குண்டுவெடிப்பில் சிக்கி, பாதுகாப்புப் படையினர் மூன்று பேர், பலியாயினர். இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழக நிகழ்வுகள்

11 பட்டாசு ஆலைகளுக்கு சீல்

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் விதி மீறி செயல்பட்ட மேலும் 11 பட்டாசு ஆலைகளுக்கு வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் சீல் வைத்தனர்.

பிப்ரவரியில் அடுத்தடுத்து நான்கு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. 30 பேர் உயிரிழந்தனர். இதைதொடர்ந்து பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டது.

இக்குழு பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்த நிலையில், மரத்தடியில் பட்டாசு தயார் செய்தது, அளவுக்கு அதிகமாக மருந்து இருப்பு வைத்திருந்தது, அறையில் அதிகமாக பணியாளர்களை கொண்டு வேலை செய்தது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக மேலும் 11 ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.

48 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பறக்கும் படை அதிகாரிகள், வேப்பூர் கூட்ரோட்டில் நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, சேலத்தில் இருந்து கும்பகோணம் சென்ற காரை சோதனை செய்தனர். அதில், சேலம் பி.வி.ஆர்.எஸ்., ஜூவல்லரியில் இருந்து கும்பகோணத்திற்கு, 48 கிலோ எடையில் குத்துவிளக்குகள், காமாட்சி விளக்குகள் உள்ளிட்ட வெள்ளி பொருட்களை, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றது தெரிந்தது. 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

காய்கறி வியாபாரியிடம் ரூ 10.5 லட்சம் அபேஸ்

விழுப்புரம்:காய்கறி வியாபாரி கொடுத்த, 10.50 லட்சம் ரூபாயுடன் மாயமான தம்பதி குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம், வி.மருதுார் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர், 44. ஜானகிபுரத்தில் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில், திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த உறவினர்கள் கோமதிவிநாயகம், அவரது மனைவி ஷோபனா வேலை செய்து வந்தனர்.கடந்த, 2ம் தேதி, காய்கறி விற்பனை பணம், 10.50 லட்சம் ரூபாயை, வங்கியில் செலுத்துமாறு தம்பதியிடம், சங்கர் கொடுத்துவிட்டு, புதுச்சேரி சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது, பணத்துடன் கோமதிவிநாயகம், ஷோபனாவை காணவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, இருவரும் சங்கரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்படி, விழுப்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news



7,000லஞ்சம் வி.ஏ.ஓ., உதவியாளர் கைது
கோவை:பட்டா மாறுதலுக்கு, 7,000 ரூபாய் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவை, பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 31; டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம், பன்னிமடை பகுதியில் உள்ளது. இந்நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக, ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த பன்னிமடை வி.ஏ.ஓ., சிவக்குமார், 39, பட்டா மாறுதலுக்கு, 7,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, பேரம் பேசினார்.

பணம் தருவதாக தெரிவித்த கார்த்திக், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். பின் வி.ஏ.ஓ., அலுவலகம் சென்ற கார்த்திக்கிடம், பணத்தை, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளர் பழனிசாமி, 60, என்பவரிடம் கொடுக்குமாறு, சிவக்குமார் தெரிவித்தார். கார்த்திக், பணத்தை பழனிசாமியிடம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ., சிவக்குமார், பழனிசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மண் சுவர் இடிந்து 3 பேர் பலி

நாமக்கல்:சுவர் இடிந்து விழுந்ததில், 2 வயது குழந்தை உட்பட, மூன்று பேர் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் அருகே, கணக்கன் தோட்டத்தை சேர்ந்தவர், விவசாயி சின்னதம்பி, 63. இவர், மண்ணால் கட்டப்பட்ட தன் பழைய வீட்டை, நேற்று காலை, 10:00 மணியளவில் கடப்பாரையால் இடித்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் பூங்கொடி, 55, அவர் பேத்தி தேவஸ்ரீ, 2, ஆகியோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு பக்கமாக மண் சுவர் இடிந்து விழுந்தது.

இதில், சின்னதம்பி, பூங்கொடி, தேவிஸ்ரீ ஆகிய மூவரும் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கியவர் களை மீட்கும் முயற்சியில், அருகில் இருந்தவர்கள் ஈடுபட்டனர். ஆனால், பூங்கொடி, தேவிஸ்ரீ உயிரிழந்தனர். சின்னதம்பியை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் உயிரிழந்தார்.நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


உலக நிகழ்வுகள்


latest tamil news



ஆப்கனில் குண்டுவெடிப்பு 7 பேர் உடல் சிதறி பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், நேற்று நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில், ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணம், சோர்க் ராட் மாவட்டத்தில், பெண் பயங்கரவாதி ஒருவர், நேற்று தன் ரிக்ஷாவில், வெடிகுண்டை பொருத்தி, பின், அதை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார். இந்த கொடூரமான தாக்குதலில், ஏழு பேர், சம்பவ இடத்திலேயே, உடல் சிதறி, பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும், தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X