பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலைகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியரின் புத்தகங்கள்

Updated : மார் 06, 2021 | Added : மார் 05, 2021
Share
Advertisement
சென்னை: சங்க கால, பழமையான நாணயங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தமிழ் எழுத்து சீர்திருத்தம் தொடர்பாக, 19 புத்தகங்களை டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளார். அவற்றில் பல புத்தகங்கள், பல்வேறு பல்கலைகளின், வரலாறு மற்றும் தொல்லியல் துறை முதுநிலை பாடத் திட்டங்களின் உயர் ஆய்வு புத்தகமாக பரிந்துரைக்கப் பட்டுள்ளன.டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட்ட ஆய்வுக்
பல்கலை, ஆசிரியரின் புத்தகங்கள்,

சென்னை: சங்க கால, பழமையான நாணயங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தமிழ் எழுத்து சீர்திருத்தம் தொடர்பாக, 19 புத்தகங்களை டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளார். அவற்றில் பல புத்தகங்கள், பல்வேறு பல்கலைகளின், வரலாறு மற்றும் தொல்லியல் துறை முதுநிலை பாடத் திட்டங்களின் உயர் ஆய்வு புத்தகமாக பரிந்துரைக்கப் பட்டுள்ளன.

டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகள்:தமிழ், பிராமி பதிவுகள் அடங்கிய சங்க கால நாணயங்கள் -1985;
களப்பிரர் நாணயம் -1986;
சங்க கால சேர நாணயம் -1987.
பாண்டியர் கால முத்திரை நாணயங்களும், அவற்றின் வெளியிடப்படாத வெள்ளி முத்திரைகளும்; பல்லவ அரசன் மகேந்திர வர்மனின் நாணயங்கள்; சங்க காலத்து மாக்கோட்டை வெள்ளி படங்களுடன் கூடிய நாணயங்கள், ஆகிய ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

சங்க கால நாணயங்கள் மற்றும் திராவிடர் தகவல்கள்; சங்க கால சேர நாணயங்களின் புதிய கண்டுபிடிப்புகள்.சங்க கால அரிய வகை சோழர் நாணயம்; கரூரில் கண்டெடுக்கப்பட்ட பெண் கடவுள் படம் பொறித்த, நீள் வட்ட நாணயம்; பல்வேறு பதிவுகளுடன் கூடிய இரண்டு பல்லவர் நாணயங்கள்.

மாக்கோட்டை நாணயங்கள்; கரூரில் கண்டெடுத்த செலுசிட் நாணயங்கள்; குட்டுவன் கோட்டை சங்க கால சேர நாணயங்கள் போன்ற ஆய்வு கட்டுரைகளும், 'தினமலர்' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ண மூர்த்தியால் சமர்ப்பிக்கப்பட்டன.

ரோம நாணயம் போன்ற திருக்கோவிலுாரில் கிடைத்த, தங்க நாணயங்கள்; கரூரில் கிடைத்த கிரேக்க தீவுகளின் நாணயங்கள் மற்றும் பித்தளை ரோம நாணயத்தின் அச்சு; கரூரில் கிடைத்த செம்பு முத்திரையிட்ட நாணயங்கள்.பண்டைய தமிழ் பகுதியில் நாணய பயன்பாடு; அதியமானின் தங்க மோதிரம்; மாக்கோட்டை வெள்ளி நாணயம் மீதான குறிப்புகள்; கரூரில் கிடைத்த எத்தியோப்பிய அக்சுமைட் நாணயங்கள் ஆகிய தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொண்டார்.

ஜூடிய அரசர்களின் மத குருக்கள் நாணயம்; ஹெலனிஸ்டிக் நாணயங்கள்; சங்க கால, மூன்று அடையாளம் தெரியாத, கோலா நாணயங்கள்; அடையாளம் அறியப்படாத பண்டைய கிரேக்க நாணயங்கள்; தங்க மோதிரம் வரையப்பட்ட, சிங்க நாணயங்கள் குறித்த ஆராய்ச்சி பதிவுகளை, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி சமர்ப்பித்துள்ளார்.

கரூரில் கிடைத்த, ரோம் குடியரசின் பணம், ஐந்தாம் நுாற்றாண்டின் சில தங்க நாணயங்கள் மற்றும் அவற்றை போன்ற நாணயங்கள்; இலங்கையில் கிடைத்த பிற்கால ரோம செப்பு நாணயங்கள் மற்றும் அதை போன்ற நான்காம் நுாற்றாண்டு நாணயங்கள்.கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள மன்னர் பெரு வழுதி கால, சங்க கால பாண்டிய நாணயங்கள்; வில் மற்றும் அம்புடன் கூடிய சாதவாகனர் நாணயம் குறித்த ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் கிடைத்த சங்க கால பாண்டிய, சோழ நாணயங்கள்.

கரூரில் கிடைத்த ஜூடிய அரசர் அக்ரிப்பாவின் இரண்டு நாணயங்கள்; கரூரில் கிடைத்த கிறிஸ்துவ நம்பிக்கையுள்ள ரோமர் நாணயங்கள்; சங்க கால சேரனின் படத்துடன் கூடிய வெள்ளி நாணயம் மற்றும் ரோமர் கால தலைக் கவசம். பனவஸியில் கிடைத்த பண்டைய சேர நாணயங்கள்; மகாமேகா பல்லவ நாணயம்; பண்டைய சேர நாணயங்களின் ஆட்சியாளர் குறித்த ஆய்வுகள். கேரளாவின் பட்டணத்தில் கிடைத்த பண்டைய சேர கால குறிப்புகள்; பண்டைய கால, அரிய, பாண்டிய நாணயத்தின் கண்டுபிடிப்பு உள்ளிட்ட ஆய்வு கட்டுரைகளை டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி சமர்ப்பித்துள்ளார்.


டாக்டர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய புத்தகங்கள்:


'தினமலர்' கவுரவ ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதி வெளியிட்டுள்ள பல புத்தகங்கள், பல்கலைகளின் பாடத் திட்டங்களில் பார்வை மற்றும் ஆய்வு புத்தகங்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


latest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X