புதுடில்லி :குஜராத்தில் நடக்கும், முப்படை தளபதியர் மாநாட்டில், பிரதமர் மோடி, நாளை உரையாற்றுகிறார்.
குஜராத்தின் நர்மதா மாவட்டம், கேவடியா நகரில் நேற்று, முப்படை தளபதியர் மாநாடுதுவங்கியது. மூன்று நாட்கள் நடக்கவுள்ள இந்த மாநாட்டில், மனித வளங்களை உருவாக்குவதில் உள்ள, இடர்ப்பாடு களுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்த கருத்தரங்குகள் நடக்கவுள்ளன.

நாளை, இம்மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்று, உரையாற்ற உள்ளார். அவருடன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார்.இம்மாநாட்டில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி, எம்.எம்.நரவானே, கடற்படை தலைமை தளபதி கரம்பிர் சிங், விமானப் படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE