பொது செய்தி

இந்தியா

பெட்ரோல் விலை குறையுமா! நிபுணர்கள் கூறுவது என்ன?

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
மும்பை : 'வாகன எரிபொருள்களின் விலையை, ஜி.எஸ்.டி., வரியின் கீழ் கொண்டு வந்தால், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 75 ரூபாயாக குறையும்' என, எஸ்.பி.ஐ., வங்கியின் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துஉள்ளனர்.எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பொருளாதார நிபுணர்கள், நேற்று கூறியதாவது:பெட்ரோல், டீசல் உள்ளிட்ட, வாகன எரிபொருள்களுக்கு, ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு விதமாக
 பெட்ரோல் விலை குறையுமா! நிபுணர்கள் கூறுவது என்ன?

மும்பை : 'வாகன எரிபொருள்களின் விலையை, ஜி.எஸ்.டி., வரியின் கீழ் கொண்டு வந்தால், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 75 ரூபாயாக குறையும்' என, எஸ்.பி.ஐ., வங்கியின்
பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துஉள்ளனர்.
எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பொருளாதார நிபுணர்கள், நேற்று கூறியதாவது:
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட, வாகன எரிபொருள்களுக்கு, ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு விதமாக வரி விதிக்கின்றன. மத்திய அரசும், தங்கள் பங்குக்கு வரி விதிக்கிறது.
இதன் காரணமாக, நாட்டின், ஒரு சில பகுதிகளில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 100 ரூபாயை தொட்டுள்ளது.


latest tamil news



ஒழுங்கற்ற அதிக வரி விதிப்பே, இந்த விலை ஏற்றத்துக்கு வழிவகுப்பதாக, பரவலாக கவலை தெரிவிக்கப்படுகிறது.பெட்ரோல் மற்றும் டீசலை, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டு வருவதே, இதற்கு தீர்வாக அமையும்.
வாகன எரிபொருள்களுக்கு விதிக்கப்படும் விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரிகள்
வாயிலாக, மத்திய - மாநில அரசுகளுக்கு அதிக வருமானம் கிடைப்பதால், அதை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வருவதை தவிர்க்கின்றனர்.
அரசியல் காரணமான விரும்பமின்மையாலும், இது சாத்தியப்படாமல் உள்ளது. பெட்ரோல், டீசல் விலைகளை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வந்தால், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 75 ரூபாயாகவும்; டீசல் விலை லிட்டருக்கு, 68 ரூபாயாகவும் குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
05-மார்-202114:36:53 IST Report Abuse
Rajas சேல்ஸ் Tax இருந்தவரை மாநில அரசுகளுக்கு பெரிய வரி வருவாய் இருந்தது. கல்வி, சுகாதாரம், மருத்துவம், துப்புரவு என எல்லாவற்றையும் மாநில அரசு தான் செய்ய வேண்டும். இதற்க்கு அப்போதைய சேல்ஸ் Tax முறையால் வருவாய் வந்து மாநில அரசுகள் செலவு செய்தன. எப்போது GST வந்ததோ அன்றிலிருந்து மத்திய அரசு தான் அதிகமாக பலன் பெறுகிறது. இத்துடன் மாநிலங்களுக்கு இடையே உள்ள வரியையும் மத்திய அரசு பெறுகிறது. GST யால் வருவாய் இழைப்பு என்பதால் தான் மாநில அரசுகள் இப்போதைய பெட்ரோலில் உள்ள வரியை குறைக்க மறுக்கின்றன..
Rate this:
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
05-மார்-202120:23:38 IST Report Abuse
தமிழ்வேள்சேல்ஸ் டாக்ஸ் இருந்தவரை கூட அரசுக்கு வரும் வருவாயைவிட வரி ஏய்ப்பின் காரணமான நஷ்டம் அதிகரித்தது. அரசு ஊழியர்களின் லஞ்ச லாவண்யம் பன்மடங்காயிற்று. அதை தடுக்க எதையும் எந்த மாநில அரசும் செய்யவில்லை. அதிகபட்ச லஞ்ச ஊழல் ஜி எஸ் ட்டி கொண்டுவர வழிகோலியது. லஞ்சத்துக்கு குடும்பத்தோடு மரண தண்டனை என்று இருந்தால்தான் லஞ்சம் ஓரளவாவது குறையும். சர்வாதிகாரி ஆடசி சிறிது நாலாவது இந்த நாட்டுக்கு தேவை .......
Rate this:
m.viswanathan - chennai,இந்தியா
05-மார்-202122:45:26 IST Report Abuse
m.viswanathanமிக சரியான கருத்து...
Rate this:
Cancel
05-மார்-202111:44:25 IST Report Abuse
தமிழ் அம்பானிக்கு அல்லக்கையாக இருக்கும் மத்திய அரசுக்கு மக்களுடைய கஷ்டம் தெரிந்திருந்தும் இப்படி கண்டுகொள்ளாமல் இருப்பது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல.உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஏதாவது அசம்பாவீதம் நடந்துவிட்டால் ஊருக்கு முன்னால் பேட்டிக்கொடுக்கும் பிரதமர் இப்படி சொந்தநாட்டு மக்கள் நொந்து சாவதை பார்த்துக் கொண்டிருப்பது அவரது கையாலாகாத தனத்தையே காட்டுகிறது.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
05-மார்-202110:30:25 IST Report Abuse
vbs manian எது எப்படியோ மத்திய அரசுக்கு கேட்ட பெயர் வருகிறது. மோடியை குறை சொல்பவர்கள் மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரி பற்றி பேசுவதில்லை. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இந்தியாவிலேயே அதிக வாட் வரி வசூலிக்க படுகிறது. இதை பற்றி காங்கிரஸ் வாய் திறக்காது.சில மக்கள் திட்டங்களை கொஞ்சம் சீர் செய்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்.
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
05-மார்-202112:39:52 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்என்ன தலைவரே பெட்ரோல் விலை குறைக்க சொன்னால் நீ கலப்பட ராமர் பெட்ரோல் போட்டுக்கோ என்று சொல்லுகிற , நீயே கலப்படத்தை ஊக்குவிக்கலாமா சொல்லு, மணி உங்க தலைவரு கலப்படம் செய்யுங்கோ என்கிறார் ஒரு பிரதமர் சேயும் செயல இது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X