பொது செய்தி

இந்தியா

அச்சுறுத்தல்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்: பிபின் ராவத்

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: 'சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நம் படையினர் தயாராக இருக்க வேண்டும்' என, முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தார்.முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது:நாடு சுதந்திரம் பெற்ற பின், அளவான போர் திறன்களை உடைய சிறிய படையாக இருந்த நம் ராணுவம், இன்றைக்கு நவீன போர் கருவிகளை உடைய, மிக வலுவான

புதுடில்லி: 'சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நம் படையினர் தயாராக இருக்க வேண்டும்' என, முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தார்.latest tamil news


முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது:நாடு சுதந்திரம் பெற்ற பின், அளவான போர் திறன்களை உடைய சிறிய படையாக இருந்த நம் ராணுவம், இன்றைக்கு நவீன போர் கருவிகளை உடைய, மிக வலுவான படையாக மாறியுள்ளது.போர்களின் தன்மைகளில், 20ம் நுாற்றாண்டில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளோம். பாதுகாப்பு விவகாரங்களில் பல சவால்களை சந்தித்து வருகிறோம். உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த ராணுவம் சந்தித்து வரும் சவால்களை விட, நம் ராணுவம் அதிக சவால்களை சந்தித்து வருகிறது.சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நம் ராணுவம் தயாராக இருக்க வேண்டும்.


latest tamil news


மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த, சீனா கடுமையான முயற்சிகளில் ஈடுபடும்.போர் திறன்களின் மாற்றத்தை உள்வாங்கி, அதை திறமையாகச் செயல்படுத்திய மற்ற நாடுகளின் படிப்பினைகளை, நாம் தெளிவாக கற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
05-மார்-202113:52:52 IST Report Abuse
M.COM.N.K.K. இன்னும் சில விஷமிகள் பொய் பிரச்சாரம் செய்து வருவதை விடவே இல்லை நாம் விடுதலை அடைந்த பொது நமது இந்தியாவின் எல்லை சரியாக வரையறுக்கப்படவில்லை இது தெரியாமல் சீனா காரன் ஒரு கிராமத்தை எல்லையில் உருவாக்கிவிட்டான் என்றும் நமது பகுதியை ஆக்கிரமித்துவிட்டார்கள் என்றும் பொய் பிரச்சாரம் செய்பவர்கள் உண்மையில் படிப்பறிவு இல்லாதவர்கள் என்றே என்ன தோன்றுகிறது.அரசியலுக்காக ஆட்சியை பிடிக்க மிக மிக கீழ்த்தரமாக பொய் பிரச்சாரம் செய்வது மன்னிக்கமுடியாத குற்றமாகும் தயவுசெய்து நமது நாட்டின் வரலாறை தெளிவாக படிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.நமது இந்திய பகுதியை ஆக்கிரமித்த ஆண்டு 1962 இதுதான் உண்மை அதன் பின் எந்த ஆக்கிரமிப்பும் சீனாவால் முடியவே இல்லை இதுதான் உண்மை இதை அனைவரும் புரிந்துகொள்ளுங்கள்
Rate this:
Cancel
05-மார்-202109:13:54 IST Report Abuse
சம்பத் குமார் 1). நாம் இராணுவ பலத்தில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளோம். அதாவது அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தப்படியாக உள்ளோம்.2). பாகிஸ்தான் தற்பொழுது நாம் இராணுவத்தில் இருக்கும் நிலையை அடைய இன்னும் அவர்களுக்கு பத்து வருடங்கள் தேவைப்படும். 3). மேலும் அவர்கள் நம்மிடம் நடந்த போர்களில் இதுவரை நம்மை வெற்றி பெற்றது கிடையாது. பங்களாதேஷ் நாம் நமது சகோதரர்கள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அன்பு பரிசு.4). ஆனாலும் நாம் நமது இராணுவத்தை வழிமையாக்கி இன்னும் பத்து ஆண்டுகளில் மூன்றாவது இடத்துக்கு வர வேண்டும்.5). பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுகிறது. மீண்டுவரவே இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும்.6). இம்ரான்கான். தற்பொழுது தனது மெஜாரிட்டியை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறுப்பித்து காட்ட வேண்டிய சூழலில் உள்ளார்.7). பாகிஸ்தான் இதுவரை நம்மை ஒருமுறை கூட உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வெல்ல முடியவில்லை. முதலில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏதாவது ஒரு பேட்டியில் பாகிஸ்தான் நம்மை வென்று காட்டட்டும். பிறகு பார்க்கலாம் அல்லது பேசலாம் இராணுவ சம்பந்தமாக. நன்றி ஐயா.
Rate this:
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
05-மார்-202111:40:02 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டுஉங்கள் வீரம் தான் பார்த்தோமே, பாக்கிஸ்தான் என்றால் வீரமா பேச்சு, சீன என்றால் அவன் பேர் சொல்ல கூட பயமா, என் எனில் அவன் உண்மையில் சிறந்த ராணுவம் வைத்துள்ளான், இப்போ கூட எல்லையில் ஒரு கிராமமே அமைத்துள்ளான் என்ன கிழிச்ச, நீ நேரு பற்றி பேசுற, அந்த காலத்தில் GPS/SENSOR/SATELITE எல்லாம் இல்லை நீ இவ்வளவு வசதி இருந்தும் கோட்டை விட்டு விட்டு உள்நாட்டில் இருந்துகொண்டு கொக்கரிப்பு இதை எல்லை பொய் செய்து காட்டு...
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
05-மார்-202108:35:49 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு உள்நாட்டு துரோகிகளை ஒழிக்க வேண்டாமா ?
Rate this:
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
05-மார்-202111:37:22 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டுஉன் வீரம் பிடிச்சி இருக்கு, கழக பாசறை தொண்டன் இருத்தது மாற்றிட, உனக்கு சுய புதிய கிடையாதா என்ன எப்போ பார்த்தாலும் நீயும் அந்த சந்திரன் என்பவனும் எவன் உங்களுக்கு எதிரே கருது என்றால் அவன் ID திருடி அதன் பேரில் கருது திருந்துங்கடா MLA வை தான் விலைக்கு வாங்குவீர்கள் இந்த அல்ப விஷயத்திலும்...
Rate this:
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
05-மார்-202111:41:51 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என்ன இவர் அடிக்கடி மாற்றி கொள்ளுகிறார் இன்று::- திமுகவுக்கு வாக்களித்து என்று எங்களுக்கு ஆதரவு இவருக்கு சுயம் இல்லையா இல்லை யாராவது சொன்னதால் மாத்திவிட்டாரா / மானசதன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X