பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: இப்படி போராட்டம் நடத்துங்களேன்!

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:அரசு பஸ் ஊழியர்கள் சமீபத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்தெல்லாம், அவர்களுக்கு கவலை இல்லை. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படாததால்,
ithu, ungal, idam, இது உங்கள் இடம், போராட்டம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

அரசு பஸ் ஊழியர்கள் சமீபத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்தெல்லாம், அவர்களுக்கு கவலை இல்லை. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படாததால், இரண்டு நாட்களாக, அரசு பஸ்களை நிறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பணிக்குச் செல்வோர், மாணவர், நோயாளி என, பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசும், தற்காலிகப் பணியாளர்களை வைத்து, அரசு பஸ்களை இயக்கியது. இதனால், சில இடங்களில் விபத்துகள் நடந்தன. போலீஸ் ஜீப் மீது, ஒரு பஸ் மோதியது; ஒரு ஊரில், சுவரை இடித்து தள்ளியது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

ஆட்டோவிலும், வாடகை காரிலும், அதிகக் கட்டணம் கொடுத்து, அவர்கள் சென்று வந்தனர். இது தான் நேரம் என, ஆட்டோக்காரர்களும் அதிக வாடகை வசூலித்தனர். நடுத்தர குடும்பத்தினருக்கு, இது எவ்வளவு பெரிய பாரம் என்பதை, யாரும் உணரவே இல்லை. நம் அரசு ஊழியர்கள், வேலை நிறுத்தம் செய்து, மக்களுக்கு துன்பம் விளைவிக்கவே செய்கின்றனர்.


latest tamil news


ஜப்பான் முதலிய நாடுகளில், தங்கள் எதிர்ப்பை அரசிடம் வெளிக்காட்ட, இரண்டு மடங்காக உழைப்பராம். மேலும், மக்களுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என, இரவு நேரத்தில் மட்டும் போராட்டம் செய்வராம். அது போன்ற போராட்டக் களத்தில், அரசு ஊழியர்கள் இறங்கினால், அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்; மேலும், அரசு ஊழியர் மீது மரியாதையும், அன்பும் கூடும்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Truth Triumph - Coimbatore,இந்தியா
05-மார்-202123:17:24 IST Report Abuse
Truth Triumph தானை தலைவன் அரசு ஊழியர்களை சும்மா உக்காந்தே ஊதிய உயர்வு போனஸ் எல்லாம் வாங்க பழக்கி தேர்தல் தில்லு முள்ளு தனக்கு சாதகமாக செய்து கொண்டான் ..வேலை நிறுத்தம் செய்பவனெல்லாம் இரண்டு சிவப்பு கொக்கி குருப் டீம்க அதன் அல்லக்கைகள் .. எய்து பிழைக்கும் ஈனர்கள் .. ஜப்பான் நாட்டின் துணை முதல்வர் இருக்கும் பொது நீங்கள் சொல்லவது போலத்தான் வேலைநிறுத்தம் செய்திருப்பார்கள் .. மக்கள் எவ்வளவு பட்டாலும் மீண்டும் இவர்களுக்கு வாக்களிப்பது இதை அனுபவிக்கத்தான் ... மக்கள் திருந்த மாட்டார்கள் என்று திண்ணமாக நம்புவதால் இவர்கள் இன்னும் கட்சி நடத்தி வாக்கு கேட்டு கிராமசபை திருச்சபை ஜாம்மாத்து எல்லாம் கூட்டம் சேர்க்க முடிகிறது ...என்னவோ போங்கோ ....
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
05-மார்-202123:16:11 IST Report Abuse
Mannai Radha Krishnan திராவிட கலாச்சாரம்....ஏழை மக்களை,பெண்களை, குழந்தைகள், முதியோரை வருத்தி எடுப்பது தான். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மணைகள் செயல் படாமல் செய்வது தான்.........கொரானோவால் ஸ்ட்ரைக்/பந்த்/கதவடைப்பு இல்லாமல் நிம்மதியாக இருந்தது......ஆரம்பிச்சிட்டாங்கய்யா......
Rate this:
Cancel
raskoolu - Madurai,இந்தியா
05-மார்-202123:12:57 IST Report Abuse
raskoolu மீண்டும் பழையபடி பிறைவடேசன் ஆக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X