மியான்மர் ராணுவ அராஜகம்; வன்முறை வீடியோக்களை பகிர டிக் டாக் தடை

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நேபிடாவ்; மியான்மரில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு ஜனநாயக ஆதரவாளர்கள் பலர் முக்கிய நகரங்களில் போராட்டப் பேரணி நடத்தத் தொடங்கியுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு எந்நேரமும் பதற்ற நிலை நீடித்து வருகிறது. மியான்மர் நாட்டு ராணுவத்தினரது அராஜகத்துக்கு உலக நாடுகள் பல

நேபிடாவ்; மியான்மரில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு ஜனநாயக ஆதரவாளர்கள் பலர் முக்கிய நகரங்களில் போராட்டப் பேரணி நடத்தத் தொடங்கியுள்ளனர்.latest tamil news50-க்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு எந்நேரமும் பதற்ற நிலை நீடித்து வருகிறது. மியான்மர் நாட்டு ராணுவத்தினரது அராஜகத்துக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னதாக ஐநா தலைவர் இதற்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் ஐநா தலையிட்டு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மியான்மர் நாட்டில் நடக்கும் போராட்டங்களின் புகைப்படங்கள் வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்க முன்னதாக தற்காலிகமாக இணைய சேவை முடக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது மீண்டும் இணைய சேவை அளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் அராஜகத்தை கண்டித்து பேஸ்புக் நிறுவனம் மியான்மர் ராணுவத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை முன்னதாக நிரந்தரமாக முடக்கியது.

தங்களது பேஸ்புக் பக்கம் வாயிலாக போராட்டக்காரர்களுக்கு ராணுவத்தினர் மிரட்டல் விடுத்து வந்ததே இதற்கு முக்கிய காரணம். பேஸ்புக்கிலிருந்து முடக்கப்பட்ட பின்னர் தற்போது சீன பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை மியான்மர் ராணுவம் கையில் எடுத்துள்ளது. போராட்டக்காரர்களை எச்சரிக்க டிக் டாக் செயலியில் அவ்வப்போது ராணுவத்தினர் மிரட்டல் வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதனை உலகம் முழுவதும் பல இணையவாசிகள் எதிர்த்து உள்ளனர். பொழுதுபோக்கு செயலியை ராணுவம் மிரட்டலுக்குப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த புதன் அன்று மட்டும் 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நாடே ரத்தக்காடாக உள்ள இந்த நிலையில் மியான்மரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் செல்போன்களில் வீடியோ எடுக்கப்பட்டு ராணுவத்தினரால் டிக் டாக் செயலி பதிவிடப்படுகின்றன. இதுவரை கிட்டத்தட்ட 800 வீடியோக்கள் இவ்வாறு டிக் டாக் செயலியில் பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டிக் டாக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை அனைவரும் தங்கள் செயலியின் வாடிக்கையாளர்களாக இருக்கும் காரணத்தால் வன்முறையை தூண்டும் வீடியோக்கள் அதில் பதிவிடப்பட தடை செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsடிக்டாக் நிர்வாகம் இந்த வீடியோக்களை உடனடியாக நீக்கிவிடும் என்று கூறியுள்ளது. மியான்மர் ராணுவம் பதிவிட்ட இதுபோன்ற வீடியோக்கள் தங்கள் செயலில் இருந்து உடனடியாக நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவாமலிருக்க டிக் டாக் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் தற்போதே ஆயிரக்கணக்கானோர் வன்முறை வீடியோக்களை பிற செயலிகளில் பகிரத் துவங்கிவிட்டது வேதனைக்குரிய விஷயம்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
05-மார்-202117:44:05 IST Report Abuse
Kalyan Singapore இந்தியாவின் விவசாயிகள் போராட்டத்த்தை ஆதரித்த க்ரெட்டா துன்பர்க், ரெஹானா எல்லாம் மியான்மரில் இவ்வளவு கொடுமை நடக்கும்போதும் இப்போது எங்கே போனார்கள் ? மியன்மார் மக்களை ஆதரிப்பதால் ஒருவிதமான பொருளாதார நன்மையையும் மேற்கத்திய நாடுகளுக்கு இல்லை என்பதாலா ? இவர்கள் உண்மை நிறம் இப்போது நம் மக்களுக்கு விளங்கியிருக்கும் என நம்புகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X