ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

Added : மார் 05, 2021 | |
Advertisement
புதுச்சேரி : வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் குருலிங்கம் வரவேற்றார். ஆச்சார்யா கல்விக் குழும முதன்மை இயக்கக அலுவலர் ராமச்சந்திரன், கல்லுாரியி முன்னேற்றத்தில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து பேசினார். கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன் பங்கேற்று, முன்னாள்

புதுச்சேரி : வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் குருலிங்கம் வரவேற்றார்.

ஆச்சார்யா கல்விக் குழும முதன்மை இயக்கக அலுவலர் ராமச்சந்திரன், கல்லுாரியி முன்னேற்றத்தில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து பேசினார். கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன் பங்கேற்று, முன்னாள் மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகள் பற்றி கூறினார்.

நடிகர் ராஜா கிருஷ்ணமூர்த்தி பேசினார்.பின், கல்லுாரியின் முன்னாள் மாணவர் சங்கத் தேர்தல் கணினி அறிவியல் பொறியியல் துறை தலைவர் கண்ணகி முன்னிலையில் நடந்தது. ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா தலைவர் ஆனந்தகுமார், துணை தலைவர்கள் ஜீவிதா, பிரியா, ஒருங்கிணைப்பாளர்கள் நவலட்சுமி, மணிபலன், இசகிராஜன் செய்திருந்தனர். வேலை வாய்ப்பு துறைத் தலைவர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X