கோவை: தேர்வு பயத்தை போக்கும் நிகழ்ச்சியில், பாரத பிரதமருடன் கலந்துரையாட, பள்ளி மாணவர்கள் வரும் 14ம் தேதிக்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பொதுத்தேர்வு பயத்தில் இருந்து விடுபட்டு, எதிர்கால லட்சிய பாதையில் மாணவர்கள் பயணிக்க, தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், பரீட்சைக்கு பயமேன் (pariksha pe charcha) என்ற தலைப்பில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். நடப்பாண்டிற்கான இந்நிகழ்ச்சி, கொரோனா காரணமாக, மார்ச் இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நடக்கும் இக்கலந்துரையாடலில், நடப்பாண்டு பெற்றோர், ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.
இதற்கு, www.innovate india.mygov.in/ppe2021 என்ற இணையதள முகவரியில், வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.இதில் வெற்றி பெறுவோர், தங்களுக்கான கேள்விகளை, 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவு செய்தால், பிரதமர் பதிலளிப்பார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தற்போது வரை, 4 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என, பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE