12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021
Share
வெள்ளி முதல் வியாழன் வரை (5.3.2021 - 11.3.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் சூரியன், சுக்கிரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.அசுவினி: எதிர்பாராத தனவரவை பெறுவீர்கள். எதிலும் சற்று கவனமாக இருப்பது அவசியம். பிறர் கூறும் விமர்சனம் பற்றி கவலைப்பட வேண்டாம்.
வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம்,  கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,  கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (5.3.2021 - 11.3.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


சூரியன், சுக்கிரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.
அசுவினி: எதிர்பாராத தனவரவை பெறுவீர்கள். எதிலும் சற்று கவனமாக இருப்பது அவசியம். பிறர் கூறும் விமர்சனம் பற்றி கவலைப்பட வேண்டாம். தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.
பரணி: பழி தரும் செயல்களைத் தவிர்க்க வேண்டும். தப்பான விஷயங்களுக்கு துாண்டும் நபர்களை விலக்குங்கள். மனதை அமைதியாக வைக்கும் வழியைக் கண்டறிவீர்கள்.
கார்த்திகை 1: நீங்கள் செய்யாத தப்புக்கு குற்றம் சொன்னால் கண்டுகொள்ளாதீர்கள். வேலைகளை முனைப்புடன் செய்ய வேண்டும். பேச்சைக் குறைப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 5.3.2021 காலை 6:00 - 6.3.2021 நள்ளிரவு 12:59 மணி


ரிஷபம்


புதன், குரு, சுக்கிரனால் நன்மை ஏற்படும். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.


latest tamil news


கார்த்திகை 2,3,4: கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூரில் இருக்கும் உறவினர்கள் நன்மை செய்வார்கள்.
ரோகிணி: அடிப்படை உரிமைக்காக நீங்கள் போராடிய நிலை மாறும். இளைஞர்கள் எதிர்காலம் குறித்து யோசித்து முடிவெடுங்கள். சிலருக்கு சிறிய அளவில் அலைச்சல் இருக்கும்.
மிருகசீரிடம் 1,2: எந்தவொரு முடிவையும் பிறரை கலந்து ஆலோசிக்காமல் எடுக்காதீர்கள். திருமணம் கூடி வரும். விவேகமாக இருப்பவர்களுக்கு தொல்லை வராது.
சந்திராஷ்டமம்: 6.3.2021 நள்ளிரவு 1:00 - 9.3.2021 அதிகாலை 4:41 மணி


மிதுனம்


ராகு, கேது, சுக்கிரனால் நற்பலன் உண்டு. சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.
மிருகசீரிடம் 3,4: யாரோ ஒருவரை நம்பி ஏமாந்த நிலை மாறும். யாருமே உங்களை மதிக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர்.
திருவாதிரை: விசேஷங்களில் பங்கேற்கும் போது பேச்சில் கவனம் தேவை. பெற்றோரிடமிருந்து சரியான வழிகாட்டுதல் கிடைக்கும். யாரிடமும் தானம் பெற வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: உங்களை கண்டுகொள்ளாமல் போனவர்கள் இனி வலிய வந்து பேசுவர். மனதில் இருந்த அநாவசிய பயம் விலகும். முன்பு இருந்து வந்த சிறு உபாதைகள் தீரும்.
சந்திராஷ்டமம்: 9.3.2021 அதிகாலை 4:42 - 11.3.2021 காலை 10:21 மணி


கடகம்

செவ்வாய், ராகு, குரு தாராள நன்மைகளை வழங்குவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.
புனர்பூசம் 4: கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவீர்கள். உடல் நலம் அடைவீர்கள். பணி சம்பந்தமான முயற்சிக்கு சாதகமான பலன் கிடைக்கும். பயணம் செல்ல வாய்ப்பு வரும்.
பூசம்: திருப்தியுடன் பணி புரிவீர்கள். புத்திசாதுாரியத்தால் வெற்றி கிடைக்கும். மற்றவர்களுக்கு உங்கள் மீது மதிப்பு கூடும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும்.
ஆயில்யம்: தாயாருக்கு உங்களால் மகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் நல்ல செய்தி அளிப்பார்கள். பணியில் பொறுப்பு அதிகரிக்கும். புதிய வீடு மாற வாய்ப்பு உண்டு.
சந்திராஷ்டமம்: 11.3.2021 காலை 10:22 மணி - நாள் முழுவதும்


சிம்மம்


சனி, புதன், சுக்கிரன் அதிர்ஷ்டமான பலன்களை தருவர். நரசிம்மர் வழிபாடு பயம் போக்கும்.
மகம்:உடல்சோர்வு தீரும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கடந்த வாரத்தில் இருந்த சிறு கவலை நீங்கும். விலகிய நண்பர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு புதிய பதவி கிடைக்கும்.
பூரம்: குடும்பத்துடன் குதுாகலமான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகள் நன்மை அடைவார்கள். பணியிடத்தில் பதற்றமின்றிச் செயல்படுங்கள். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெறுவார்கள்.
உத்திரம் 1: புதிய சவால் ஒன்றை ஏற்று வெற்றி காண்பீர்கள். உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றுவார்கள். இன்பச் சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.


கன்னி


செவ்வாய், குரு, புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.
உத்திரம் 2,3,4: அடுத்தவர்களுக்கு உதவி செய்து வாழ்வீர்கள். தெளிவான முடிவு எடுப்பதில் சிறு குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரால் ஏற்பட்ட பிணக்குகள் சரியாகும். முன்பு இருந்த பொருளாதார சிக்கல் நீங்கும்.
அஸ்தம்: உங்கள் பெருந்தன்மையால் குடும்ப மானத்தை காப்பாற்றுவீர்கள். சந்தோஷம் அதிகரிக்கும். நீங்கள் வியந்து மதிப்பவர்களின் சந்திப்பு கிடைக்கும். பெண்கள் விலை உயர்ந்த நகையை வாங்குவார்கள்.
சித்திரை 1,2: தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல நேரிடலாம். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் ஒப்புக்கொள்வார்கள். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.


துலாம்


சனி, சுக்கிரன், சந்திரன் சாதகமான பலனைத் தருவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
சித்திரை 3,4: காதலில் ஈடுபாடு வரும். வசீகரம் கூடும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். குடும்பத்தில் மூத்தவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வீர்கள்.
சுவாதி: உங்களின் நலம் நாடுபவர் கூறும் கருத்தை கேட்டு நடப்பீர்கள். இளைஞர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். பணியாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.
விசாகம் 1,2,3: உடன்பிறந்தோருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். நல்ல செய்தி ஒன்று வரும். பிறருக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும். அரசு வகையில் எதிர்பாராத சலுகை ஒன்று கிடைக்கும்.


விருச்சிகம்


சனி, சுக்கிரன், சூரியன் உதவிகரமான நிலையில் உள்ளனர். கோமாதா வழிபாடு வளம் தரும்.
விசாகம் 4: பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அதனால் முக்கிய வேலைகள் பாதிக்காமல் கவனமாக இருங்கள். நண்பர்களை எச்சரித்து பிரச்னையிலிருந்து காப்பீர்கள். கலகலப்பான சூழலால் கவலையை மறப்பீர்கள்.
அனுஷம்: திடீர் சந்தோஷம் வரும். வேண்டாத இடத்தில் உரிமை எடுத்து பிரச்னைக்குள்ளாகி மீளுவீர்கள். முன்பு செய்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் இருக்கும்.
கேட்டை: காதல் உணர்வுகள் தலைதுாக்கும். வசீகரத்தன்மை அதிகரிக்கும். எதிர்பாலினத்தை சேர்ந்த ஒருவரால் நன்மை ஏற்படும். பணவரவுக்காக செய்த முயற்சி வெற்றி அடையும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.


தனுசு


ராகு, கேது அளவில்லாத நற்பலன்களை வழங்குவர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.
மூலம்: கலைத்துறையில் மேன்மை கூடும். ஆர்வம் காரணமாகப் புதிய விஷயம் ஒன்றை கற்பீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும்படி வருமானம் வரும். நண்பர் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி சொல்வார்.
பூராடம்: புது முயற்சி வெற்றி தரும். நண்பர் வட்டம் பெருகும். அந்தஸ்து சற்று உயரும். வாழ்க்கைத்துணை வழி உறவினரால் உற்சாகம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகள் உங்கள் முயற்சியால் முடிவுக்கு வரும்.
உத்திராடம் 1: வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வயதில் குறைவானவருடன் நட்பு பலப்படும். மருத்துவ முறையை மாற்றி முயற்சிப்பீர்கள். பலநாள் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிவாகும்.


மகரம்


குரு, புதன், சுக்கிரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
உத்திராடம் 2,3,4: தேவைகள் பூர்த்தியாகும். அரசியல் பிரமுகர்களால் ஆதாயம் உண்டு. அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். திறமை பளிச்சிடுவதால் பாராட்டு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.
திருவோணம்: உடன்பிறந்தோரிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிறருக்காக கையெழுத்திட வேண்டாம். உங்களின் சமயோசித செயலால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
விட்டம் 1,2: கொடுத்த தொகை திரும்பி வந்து வியப்பளிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. கனவுகள் நனவாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.


கும்பம்


புதன், சுக்கிரன், சந்திரன் அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.
அவிட்டம் 3,4: வார ஆரம்பத்தில் நற்செய்தி வரும். மனதுக்கு நெருக்கமானவருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிரபலமான ஒருவரின் சந்திப்பு கிடைக்கும். நீண்ட கால பிரச்னை ஒன்றிலிருந்து மீளுவீர்கள்.
சதயம்: கடவுள் நம்பிக்கையை அதிகரிக்கும் சம்பவம் நிகழும். காலில் சிறு காயம் ஏற்பட்டுச் சரியாகும். புதிய பணி பற்றிய முயற்சியை சற்று தள்ளி வைக்கலாம். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: உடல் நலம் குன்றியிருந்த உறவினர் நலமடைவார். திருமணம் பற்றி இடையில் நின்றிருந்த முயற்சி தொடரும். குடும்பத்தில் ஒருவருக்குப் பணி பற்றி நல்ல செய்தி வரும். வம்புகளில் ஈடுபடாதீர்கள்.


மீனம்


சனி, குரு, ராகு நல்ல பலன்களை அளிப்பர். சூரியன் வழிபாடு துயர் தீர்க்கும்.
பூரட்டாதி 4: எதிரிகள் உங்களைக் கண்டு பயப்படுவார்கள். எடுத்த விஷயங்களை எளிதில் முடிப்பீர்கள். கடந்தகால சிக்கல்கள் அகலும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. தாயின் ஆசியை பெறுவீர்கள்.
உத்திரட்டாதி: யோசித்துச் செயல்பட வேண்டிய வாரம். உடல் நலனில் இருந்த அச்சுறுத்தல் அகலும். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். படிப்புக்கு ஏற்ற பணியில் சேருவீர்கள். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும்.
ரேவதி: ஒன்றிற்கு மேற்பட்ட வகைகளில் வருமானம் வரும். முந்தைய முதலீடுகள் அதிக லாபம் தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமான சூழல் நிலவும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X