புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்து 39 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 16,838 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 11 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்தது. 1.76 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,57,548 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.01 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.41 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.58 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
இதுவரை நாடு முழுவதும் போடப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 80 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 லட்சத்து 88 ஆயிரத்து 170 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சோதனைகள்
இந்தியாவில் நேற்று (மார்ச் 4) ஒரே நாளில் 7,61,834 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 21 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

உலக பாதிப்பு
இன்று (மார்ச் 5-ம் தேதி) காலை 10:15 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 11 கோடியே 62 லட்சத்து 17 ஆயிரத்து 134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்து 81 ஆயிரத்து 666 பேர் பலியாகினர். 9 கோடியே 18 லட்சத்து 84 ஆயிரத்து 667 பேர் மீண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE