10ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்கான திமுக.,வின் வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,6-ம் தேதி நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக.,வில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களும், இந்தியன் முஸ்லிம் லீக்கிற்கு 3,
DMK,CandidateList, Stalin, Assembly Election, திமுக, ஸ்டாலின், வேட்பாளர் பட்டியல்

சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்கான திமுக.,வின் வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,6-ம் தேதி நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக.,வில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களும், இந்தியன் முஸ்லிம் லீக்கிற்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும், காங்., மதிமுக, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கட்சிகளுடன் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையே மார்ச் 7-ம் தேதி திருச்சியில் திமுக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.


latest tamil news


மேலும், தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதனால், திருச்சி பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் 10ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்தார். எனவே அதற்குள்ளாகவே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
05-மார்-202117:36:55 IST Report Abuse
Anand அனைவரும் மண்ணைக்கவ்வட்டும்..........
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
05-மார்-202116:47:52 IST Report Abuse
INDIAN Kumar மதுவை ஒழிப்பது பற்றியும் ஊழல் நடக்காது உறுதி என்பது பற்றியும் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன் ???
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
06-மார்-202101:43:04 IST Report Abuse
Matt Pதுறை முருகன் உட்பட பல தொண்டர்கள் மதுபான தொழிற்சாலைகளில் வாரி எடுக்கிறார்களாம். ...தொண்டனுக்கு துரோகம் செய்வது தவறல்லவா? ? அப்பாவும் ...தேனை வேஸ்ட் பண்ணக்கூடாது என்றிருக்கிறார். ..அண்ணாத்துரையும் மாற்றான் தொஆட்டத்து மல்லிகையும் மணக்கும் என்றார். அதாவது ..அடுத்தவன் வீடு பணமோ பொது பணமோ எதுவானாலும் அனுபவிக்கலாம் என்று தான். ..தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மரியாதை கொடுப்பதில் நல்லவர் ஸ்டாலின் ....
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
05-மார்-202116:42:19 IST Report Abuse
ThiaguK அந்த லிஸ்டுல கோடீஸ்வரனும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கூஜா தூக்குபவர்ஹளுக்குத்தான் கிடைக்கும் ..அண்ணா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஒரு சினிமா ஆட்களிடம் மாட்டி கொண்டு இன்று வட நாட்டவன் சொல்லும் ஆளுதான் சீட்டு என்று ஆகி விட்டது ...உண்மையான தொண்டன் அங்கிருக்க லாயக்கற்றவன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X