10ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு| Dinamalar

10ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (17) | |
சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்கான திமுக.,வின் வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,6-ம் தேதி நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக.,வில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களும், இந்தியன் முஸ்லிம் லீக்கிற்கு 3,
DMK,CandidateList, Stalin, Assembly Election, திமுக, ஸ்டாலின், வேட்பாளர் பட்டியல்

சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்கான திமுக.,வின் வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,6-ம் தேதி நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக.,வில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களும், இந்தியன் முஸ்லிம் லீக்கிற்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும், காங்., மதிமுக, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கட்சிகளுடன் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையே மார்ச் 7-ம் தேதி திருச்சியில் திமுக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.



latest tamil news


மேலும், தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதனால், திருச்சி பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் 10ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்தார். எனவே அதற்குள்ளாகவே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X